பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் பத்து 115 திருப்பெருந்துறை நிகழ்ச்சி, நடைபெற்றுப் பல காலம் சென்றபின்பும், பல இடங்கட்குச் சென்று இறைவழிபாடு செய்தபின்பும், இறைவனுடைய பல்வேறு வடிவங்களையும் தரிசித்தபின்பும்கூட அடிகளாரின் மனத்தைவிட்டு நீங்காமல் இருந்தது, பெருந்துறையில் கண்ட குருநாதர் வடிவேயாம். இக்கருத்தை முன்னரும் சுட்டிக் காட்டியுள்ளோம். பெருந்துறையில் குருநாதர் தில்லைக்கு வருக என்று அருளினாரே தவிர, வாய் திறந்து வேறொன்றும் சொல்லவில்லை. அவர் மறைந்து பல நாட்கள் கழித்தும், அடிகளார். அந்த வடிவத்தையே நினைந்து இந்தப் பத்துப் பாடல்களிலும் குருந்தம் மேவிய சீர்’ என்று பாடுகிறார். குருந்த மரத்தடியில் இருந்தவர் ஒன்றும் பேசவில்லை. ஆனாலும், இப்பொழுது அந்த வடிவத்தை நினைந்து தம்முடைய துயரத்தையெல்லாம் எடுத்துக்கூறிய அடிகளார், ‘என்ன?’ (அதெந்துவே) என்ற ஒரு வார்த்தைக்கூடக் கேட்கக்கூடாதா என்ற கருத்தையே இப்பதிகத்தின் ஒன்பது பாடல்களிலும் பாடினார். இவ்வளவு கூறியும் அந்தக் குருநாதர் இவர் விரும்பியபடி என்ன?’ என்று ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. எனவே, அதை விட்டுவிட்டு, இந்தத் துன்பக் கடலில் உழலும் என்னைப் பார்த்து கயிலை செல்வதற்குரிய வழி இதுதான்; உடன் புறப்பட்டு வருவாயாக என்று நீ சொல்லவேண்டும் என்ற வேண்டுதலைச் சமர்ப்பிக்கின்றார். 'திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு எண்ணி என்பதால், குருநாதர் இருந்த