பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுக்குன்றப் பதிகம் 127 அதற்குத் தகுதியில்லாத என் சிறிய அன்பை பூணொணாததோர் அன்பு) ஏற்றுக்கொண்டு பூண்டு) நாள்தோறும் எனக்குத் தண்ணளி செய்ததை விடாமல் போற்றி நின்றேன். ஆனாலும் அந்தத் தண்ணளிக்கு நான் தகுதியற்றவன் என்ற நினைவு என்னை வந்து உறுத்தியதால், வெட்கமும் துயரமும் கலந்து, பெருங்கடலுள் மூழ்கிக்கொண்டிருந்த நான், பெருந்துறைத் தோணி என்பதைப் பற்றிக்கொண்டு என் பயணத்தைத் தொடரலாயினேன். “நின் தண்ணளிக்கு நான் தகுதியற்றவன் என்ற எண்ணம் என்னை உறுத்தியதுபோல, இந்தப் பெருந்துறைப் பெருந்தோணியும் என்னால் வைத்துக் காப்பாற்ற முடியாதது என்ற அச்சமும் என்னை வெருட்டலாயிற்று. 'இந்த அச்சமும் அந்த நாணமும் என்னை விட்டு நீங்க வேண்டுமாயின் இவற்றைப் போக்கக் குருநாதர் வடிவில் நீயே வந்து என்னைக் காக்க வேண்டும். இவ்வாறு வேண்டிக்கொண்டிருந்த என் எண்ணம் நிறைவேற எளிதாகக் காணமுடியாத அப்பெருந்துறைத் திருக் கோலத்தைக் கழுக்குன்றில் வந்து காட்டினாய்’ என்றவாறு. 472. கோல மேனி வராகமே குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி ஞாலமே-கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும் காலமே உனை ஓத நீ வந்து - காட்டினாய் கழுக்குன்றிலே 5 பன்றி என்ற விலங்கு பார்ப்பதற்கு அருவருப்பைத் தோற்றுவிக்கும் வடிவைக் கொண்டதாகும். ஆனால்,