பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கனவிலிருந்து விழித்தவருக்குக் கனவு மறைந்துபோய் யதார்த்தம் எதிரே நிற்பதுபோல் அடிகளார் யதார்த்தத்திற்கு வருகிறார். அப்பொழுது தோன்றிய பாடல்தான் 'கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை (478) என்று தொடங்கும் பாடல். இந்தப் பின்னோக்குப் பார்வை எங்கே எப்பொழுது அடிகளாருக்கு அருளப்பெற்றது என்பதை நாம் அறியமுடியாது; ஏன், அடிகளாரேகூட அறிந்துகொள்ள முடியாது. இந்தப் பின்னோக்குப் பார்வையில் தோய்ந்திருந்த நேரத்தில் வெளிவந்தது ஒரெயொரு பாடல். 'உருத்தெரியா என்று தொடங்கும் பாடலாகும் அது. இத்தகைய பின்னோக்குப் பார்வை இன்றுள்ள திருவாசக வைப்புமுறையில் நீக்கி முன்னெனை (435) என்று தொடங்கும் பாடலிலும், உற்ற ஆக்கையின் உறுபொருள் (436) என்று தொடங்கும் பாடலிலும், 'உருத்தெரியாக் காலத்தே (477) என்று தொடங்கும் இந்தப் பாடலிலும், 'மானேர் நோக்கி மணவாளா (499) என்று தொடங்கும் பாடலிலும் வருவதைக் காணலாம். ஆக, இந்த நான்கு பாடல்களையும் தனியே எடுத்துவிட்டால் திருவாசகப் பாடல்கள் ஏறத்தாழ ஒரே திசையில் செல்வதைக் காண முடியும். - ஒவ்வொரு முறையும் இறையுணர்வில் மூழ்குதல், அதில் கிடைத்த சில அனுபவத்தில் திளைத்தல், பிறகு அந்த அனுபவத்தை அமைதியான நேரத்தில் சிந்தித்தல், அது பாடலாக வெளிவருதல் ஆகிய பொது இலக்கணம் இந்த நான்கு பாடல்கள் தவிர ஏனைய எல்லாப் பாடல்களுக்கும் பொதுவானதாகும். அவரது இந்தப் புதிய கண்டுபிடிப்பு எப்பொழுது எங்கே நிகழ்ந்தது என்று அறிய வாய்ப்பில்லை. திருவடி தீட்சையில் சிவமாகவே இவரை மாற்றிவிட்டமையின்