பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'ஆர்வம் கூர அருள்செய்யாய் என்றதன் நோக்கம் இதுவேயாகும். 486. அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் கடியேனுடைய கடு வினையைக் களைந்து உன் கருணைக் கடல் பொங்க உடையாய் அடியேன் உள்ளத்தே ஒவாது உருக அருளாயே 2 'யாது ஒன்று நினைக்க, தான் அதுவாதல்’ என்பது இந்நாட்டுச் சைவர்களின் பழைய கொள்கைகளில் ஒன்று. இந்தத் தத்துவம் ஏனைய நாடுகளிலும் பரவியிருந்தது என்பதைக் குறிக்க, நீ எதனை நினைக்கின்றாயோ plgjouró:36, -gaustus (what you think you become)' argårp முதுமொழி மேலை நாடுகளிலும் உள்ளது. இறைவனுடைய அருள் கடல்போல் பெருகி. நின்றாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் கலம் வாய் மூடி இருப்பின் அந்தக் கருணை உள்ளே நுழைய முடியாது. சென்ற பாடலில் 'எனது ஆர்வம் மிகுதிப்பட அருள்வாயாக’ என்று அடிகளார் வேண்டிக்கொண்டது சாதாரணமான ஒன்றன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்வம் கூர (வளர வளர) கருணை உள்ளே புக வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆகவேதான், முதற்பாடலின் இறுதியில் ஆர்வம் கூர என்றவர், இரண்டாவது பாடலின் தொடக்கத்திலேயே அடியார்கள் பெற்ற பயனையும்: அவர்கள் மேற்கொண்ட வழியையும் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார்.