பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து 17 தெரியாமல் விட்டுவிட்டதாக நினைத்து நொந்து கொள்கிறார். விட்டுவிட்டது தம்குறை என்று கருதியதால், இறைவனையே நோக்கி 'உன் திருவடி மலர்க்கணே வந்திடப் பணியாய்' என்று வேண்டிக்கொள்கிறார். நெஞ்சில் அன்பு நிறைந்திருந்தால் கண்ணிர் எப்பொழுதும் நிறைந்து வழிந்தோடும். தமக்குக் கண்ணிர் அவ்வாறு வழிந்து ஒடவில்லை என்ற காரணத்தால் தம் மனத்தில் அன்பில்லை என்ற எண்ணம் மீதுர, தம் கண்ணையும் மரக் கண்' என்று பேசுகிறார். இறைவனுடைய முழுவடிவத்தையும் மனத்துட் கொண்ட அடிகளார் அவனுடைய திருமேனியில் மூன்று உறுப்புக்களைச் சுட்டுகிறார். அடைக்கலம் என்று வந்தவர்களைக் காத்தற்காகக் காலனையும் உதைத்த திருவடி அவனுடையது. காலன் தன் கடமையைத்தான் செய்தான். ஒருவன் கடமையைச் செய்யும்போது குறுக்கிட இறைவனுக்குக்கூட உரிமை இல்லை எனினும், இந்தச் சட்டங்களை யெல்லாம் விஞ்சி நிற்கின்றது அடைக்கலம் வந்தவனைக் காக்கின்ற பொறுப்பு. எல்லையற்ற அகங்காரத்தோடு உலகையே அழிப்பேன் என்று கீழிறிங்கிய கங்கையைத் தன் சடையில் தாங்குவதன் மூலம் அகங்காரத்தை அழிக்கும் அவனுடைய ஆற்றல் "கங்கையாய் என்பதன் மூலம் பேசப்பெறுகிறது. எல்லை யற்ற அகங்காரம் உடையவளாயினும் பெண்ணாதலின் அவளை அழித்தல் சரியன்று என்று கருதிய பெருமான், தன் சடையினுள் அவளை அடங்கியிருக்குமாறு பணித்தான். 'அங்கி தங்கிய கையாய்' என்பது மூன்றாவது அடை யாளம். அங்கி ஆகிய நெருப்பு, சர்வ சங்கார காலத்தில்