பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அச்சப் பத்து 249 524. மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன் நஞ்சழே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே 9 உரும் இடி, செஞ்செவே உறுதியாகவே, திருமுண்டம்- அழகிய நெற்றி. நஞ்சையே அமுதாக உண்டவனாகிய எங்கள் பெருமான் என் காட்சிக்கும் உட்பட்டவனாகி, என் தலைவனுமாகி, (எம்பிரானாய்) உறுதியாகவே என்னை ஆண்டுகொள்ளவும் செய்தான். அப்படிப்பட்ட பெருமானின் திருநீற்றை நெற்றியிலிடக் கூசுவாரைக் கண்டு அஞ்சுகிறேன் என்கிறார். - 525. கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்தி நின்று ஏத்தமாட்டா ஆண் அலாதவரைக் கண்டால் - அம்ம நாம் அஞ்சுமாறே 10 கோண்இலா வளி- வளைதலில்லாத அம்பு ஆண்மைமனத்தை அடக்கி ஆளும் தன்மை. பிறைச்சந்திரனை அணிந்தவனைச் சித்தத்தின் ஆழத்தில் ஓயாது நினைந்து, அதன் பயனாக உள்ளம் நைந்து நெக்குருகி, ஒளிபொருந்திய கண்கள் கண்ணிரால் மறைய, ஒரே நிலையில் நின்று அவன் புகழை ஏத்தி தி.சி.சி.IV 17