பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 255 மாநகரில் பாண்டியன் உட்பட எத்தரத்து மக்களும் அத்திருவடியைக் கண்டு தரிசிக்க தெரிவர வாய்ப்பளித்துக் கண்டாரது உள்ளத்தை உருக்கும் பணியைச் செய்கின்றது அத்திருவடி திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பின்னர் நடை பெற்றதாகும், குதிரைச் சேவகனாக வந்த நிகழ்ச்சி. பெருந்துறையில் குருநாதரின் வடிவில் ஈடுபட்டு அவ்வடிவையே தம்முள் நிறுத்தி, ஆனந்த பரவசர் ஆனார் அடிகளார். அந்தக் குருநாதர் தரிசனத்தின்போதே உமையொரு பாகன் தரிசனமும், தில்லைக் கூத்தன் தரிசனமும் அடுத்தடுத்து திகழ்ந்தன. குருநாதர் பின்னரும் இவருடைய மனத்தில் ஆழ்ந்திருந்தபோதிலும், மதுரையில் குதிரைச் சேவகன் தரிசனம் சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்ததாகும். குதிரைகள் வரும் என்று அடிகளார் நம்பியது உண்மைதான். ஆனால், சொக்கனே குதிரைச் சேவகனாக வருவான் என்று அவர் கனவிலும் கருதியதில்லை. குதிரைச் சேவகன் திருவடிகளைப் பார்த்தபொழுது சேவகன் மறைந்து விடுகிறான். சில நாட்கள்முன்வரை அமைச்சராக இருந்த ஒருவர், குருநாதரின் திருவடிகளில் வீழ்வது சரி. ஆனால், குதிரைச் சேவகனின் கழல்களை இறைஞ்சவேண்டும் என்ற GT6শ্রষ্ঠা দুটা Lb எப்படி வந்தது? அந்தக் கழல்கள் அடிகளாருடைய உள்ளத்தை உருகச்செய்துவிட்டன. முன்னரே, குருநாதரின் திருவடிகள் உள்ளத்தை உருக்கியதை அனுபவித்தவர் அவர். இப்பொழுது மதுரையில் குதிரைச் சேவகனின் திருவடிகள் உள்ளத்தை உருக்கின என்றால், அக்குதிரையின்மேல் அமர்ந்துள்ளவன் சாதாரணக் குதிரைச் சேவகன் அல்லன், ஆலவாய்ச் சொக்கனே ஆவான் என்ற உண்மை அடிகளாருக்குத் தெற்றென விளங்கியது. குருநாதராக வந்தவர் ஆலவாய்ச்