பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 257 கூடிடுமேல் என்று அடிகளார் கூறியது நம் சிந்தனையைத் துரண்டுகிறது. வருவானேயானால், என்பதற்கு எழுவாயாக அமைந்துள்ள குதிரைச் சேவகனைப்பற்றி அடிகளார் என்ன சொல்லுகிறார் என்று அறிவதற்கு மீண்டும் ஒரு முறை பாடலைக் காண்டல் தேவை. இரண்டு தொடர்கள் இந்த நுணுக்கத்தை அறிவிக்கின்றன. ஒன்று கதிரை மறைத்தன்ன சோதி” என்பதாகும். இரண்டாவது 'கழுக்கடை கைப்பிடித்து’ என்பதாகும். பாண்டியனிடம் குதிரைச் சேவகன் இப்பொழுது வந்துள்ள நிலையில் இவையிரண்டும் அவன்பால் இல்லை. சூரியனை மறைக்கின்ற மாபெரும் ஒளிப்பிழம்பாக (கதிரை மறைத்தன்ன சோதி) அவன் வரவில்லை. இரண்டாவது, என்றும் அவன் கையை விட்டு அகலாத சூலமும் (கழுக்கடையும்) அவன் கையில் இல்லை. ஆலவாய்ச் சொக்கனே குதிரைச் சேவகன் என்றாலும் அவன் இப்பொழுது வந்துள்ளது சாதாரண குதிரைச் சேவகன் வடிவிலாகும். இதனை விட்டு நீங்கித் தனக்கே உரிய சோதி சொரு பத்தில் கழுக்கடையையும் கையிலேந்தி வருவானே யானால், (வந்து கூடிடுமேல்) இரண்டு மாபெரும் அற்புதங்கள் நிகழும் என்பதை உறுதியோடு பறையடித்துச் சொல்லச் சித்தமாக இருப்பதாக அடிகளார் கூறுகிறார். அவன் இவ்வாறு வருவானேயானல் தம்மை அறிவுடையவர் என்று கருதிக்கொள்கின்ற அனைவரும் அவனைக் கண்டவுடன் தம் பெருமையை மறந்து (சதுரை மறந்து ஞானப் பித்துப் பிடித்துத் திரிவர் (அறி மால் கொள்வர்) என்பது முதலாவது நிகழ்ச்சி.