பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பரிமேல் கொண்டவரைச் சாதாரணக் குதிரைச் சேவகன் என்றா நினைத்துவிட்டீர்கள்? இல்லை, இன்ப வெள்ளம் குதிரைச் சேவகன் என்ற ஒர் உருக் கொண்டு, மதுரை நகரில் வந்ததுமட்டு மல்லாமல், உண்மைத் தொண்டர்களின் உள்ளத்தினுள்ளும் புகுந்துவிட்டது. 'தொண்டர்களே! இன்பவெள்ளம் என்ற நுண்பொருளை எப்படி மனத்தில் ஏற்றித் தியானிப்பது என்று கவலை கொள்கிறீர்களா? கவலை வேண்டா; குதிரைச் சேவகனார் இன்ப வடிவினராய் இருந்தாலும், அவருடைய திருவடிகள் காட்சி தரக்கூடிய நிலையில் பருவடிவுடன் குதிரையின் அங்கவடிவில் உள்ளன. அந்தப் பெய்கழலைச் சென்று பேணுவிர்களாக என்றவாறு. பாண்டினார் என்று இறைவனைக்கூற ஒரு காரணமுண்டு. பாண்டி நாடே பழம்பதியாகவும்: (திருவாச 218 என்று முன்னரே கூறியுள்ளார். ஆதலின், தென்னன், பாண்டியனார் என்ற சொற்கள் சொக்கனையே சுட்டுகின்றன என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். 529. செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நல்நாட்டு இறைவன் கிளர்கின்ற காலம் இக் காலம் எக் காலத்துள்ளும் அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மாக் கடவி எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இரு நிலத்தே 4 இப்பாடலை, தென்னன். நல் நாட்டு இறைவன், எக்காலத்துள்ளும் அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து, ஆனந்த மாக் கடவி, எதிர்ந்தார் இரு நிலத்தே புரள,