பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஏதேனும் முற்பட்ட ஒரு மானிடப் பிறப்பை அடிகளார் குறிக்கிறாரோ என்றால், அதுவும் இல்லை என்பதை 'உளம் மன்னி என்ற சொற்கள் வெளியிடுகின்றன. முற்பட்ட ஒரு மானிடப் பிறப்பில் உள்ளத்தில் கூத்தன் குடிபுகுந்திருப்பானேயானால், கருணையினால் ஆண்டு கொண்டிருப்பானேயானால், அந்த உயிர் மீட்டும் ஒரு பிறப்பெடுத்தல் நடவாத காரியம். தருக்க ரீதியாக இப்பாடலின் முதலடியை ஆராய்ந்தால் 'உருத் தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம் மன்னி கருத் திருத்தி கருணையினால் ஆண்டு கொண்டது திருவாதவூரர் என்ற தனிமனிதனின் இந்தப் பிறப்பையே ஆகுமென்பது தெளிவாகும். ஏனைய பாடல்களில் வருவதுபோலப் பிறப்பின் இழிவு இந்தப் பாடலில் (47) பேசப்பெறவில்லை. பிறப்பை அறுத்ததும் இப்பாடலில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக உருத் தெரியாக் காலத்து உள் புகுந்த செய்தி, உளம் மன்னிய செய்தி, கருவைத் திருத்திய செய்தி, ஊன் இந்த உடம்பில் புக்க செய்தி, தராதரம் பாராமல் கருணை காரணமாக ஆண்டுகொண்ட செய்தி ஆகிய இத்தனையும் இரண்டு அடிகளிலேயே இடம்பெறுகின்றன. அணிகொள் தில்லை கண்டேனே என்று பாடினாலும், தில்லைக் கூத்தனோ, குருநாதரோ இந்தப் பாடலில் பேசப்பெறவில்லை என்பதை நினைவில் கொள்வது நலம். அப்படியானால் அணிகொள் தில்லையில் எதனைக் கண்டார்? இந்தப் பிறப்பில் குருநாதர் திருவடி வைத்து ஆட்கொண்ட பிறகுகட, திருப்பெருந்துறையிலோ பிற ஊர்களிலோ கிடைக்காத ஒரு காட்சி தில்லையில், இந்த விநாடியில், அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். பழைய பிறப்பையோ, இந்தப் பிறப்பை எடுப்பதற்கு முன்னிருந்த நிலையையோ அறிந்துகொள்ளுதல்