பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 411 ஒன்றும் போதா நாயேனை உய்யக்கொண்ட நின் கருணை' என்று கூறுவதால், இறைவனைப் பார்த்து நேரடியாகப் பேசும் பேச்சாகும் இது என்பதை அறிய முடியும். அந்தக் கருணை இப்போது எங்கே போய்விட்டது என்று கேட்கிறார். தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 'தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தான்’ என்பது பழமொழி. ஒன்றுமில்லாத நாய்போன்றவர் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளுகிறார் அடிகளார். அத்தகைய ஒருவரைத் தம் கருணை காரணமாகக் குருநாதர் உய்யக்கொண்டார் என்றால், அந்தக் குருநாதரிடம் கேள்வி கேட்பதற்கோ, ஏன் இப்பொழுது கருணை பாவிக்கவில்லை என்று கேட்பதற்கோ எவ்வித உரிமையும் அடிகளாரிடம் இல்லை. ஏதோ, கொடுத்து வைத்ததைக் கேட்டதுபோல ‘என்னை ஆட்கொண்ட உன்னுடைய கருணை இப்போது எங்கே போயிற்று' என்றல்லவா கேட்கிறார்! ஆண்டான் அடிமைத் திறத்தில் இவ்வாறு உரிமை எடுத்துக்கொண்டு, ஆண்டானைக் கேள்வி கேட்டது ஏற்றுக்கொள்ளப்பெற்ற ஒன்றாகும். நாவரசர் பெருமான் ‘என் ஆவி காப்பதற்கு இச்சையுண்டேல், இருங்கூற்றகல மின்னாரும் மூவிலைச் சூலம் என்மேல் பொறி திருமுறை:4:09:) என்றும், ‘என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே’ (திருமுறை: 4:05:2) என்றும் கேட்டது மேலே கூறியதற்குச் சிறந்த உதாரணமாகும். அன்று நீ எனக்களித்த கருணை இன்று எங்கே போய்விட்டது என்று அடிகளார் கேட்பதும் இந்த வகையைச் சார்ந்ததேயாகும். 'ஏழை பங்கா!' என்ற விளி, இருபொருள்பட அமைக்கப்பட்டுள்ளது. ஏழை என்பது பெண்களைக்