பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நெக்கு, இங்கு அளியிலாதவர்' (519) என்றும், தொழும்பரோடு அழுந்தி.சேவடி பரவி, வெண்ணிறு அணிகிலாதவர் (520) என்றும், தாள தாமரைகள் ஏத்தி, தடமலர் புனைந்து, நையும் ஆள் அலாதவர் (52) என்றும், "பாதம் ஏத்தி அகம் நெகாதவர் (522) என்றும் கழல்கள் ஏத்திச் சிறந்து இனிது இருக்கமாட்டா அறிவு இலாதவர்' (523) என்றும், திருமுண்டம் திட்ட மாட்டாது அஞ்சுவார்’ (524) என்றும், நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு, வாள் நிலாம் கண்கள் சோர, வாழ்த்தி நின்று, ஏத்தமாட்டா ஆண் அலாதவர் (525) என்றும் பாடியுள்ளார். மேலே காட்டப்பெற்ற பகுதிகளைத் தனியே ஒருமுறை படித்துப் பார்த்தால், முதல் இரண்டு பாடல்களும் ஒரு வகை மனிதரைக் குறிக்கின்றன. சைவப் பரம்பரையில் பிறந்தவர், சிவன் கோவிலுக்குத் தவறாமல் செல்பவர், இடைஇடையே வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் செல்பவரை இன்றும் காணலாம். அவர்கள் பற்றியவை முதலிரு பாடல்கள். அடுத்துள்ள எட்டுப் பாடல்களிலும் ஒரே கருத்துத்தான் பல்வேறு சொற்கள் கொண்டு திரும்பத் திரும்பப் புனையப்பெற்றுள்ளது. உண்மை அன்பில்லாதவர் மனம் நையாதவர் என்ற இரண்டு சொற்களுக்கு விளக்கமாகப் பின்வரும் இரண்டு பாடல்களை அமைத்துள்ளார். துளிஉலாம் கண்ணராகித் தொழுது, அழுது உள்ளம் நெக்கு இங்கு அளியிலாதவர் (519) நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து உருகி, நெக்கு, வாள் நிலாம் கண்கள் சோர, வாழ்த்தி நின்று ஏத்த மாட்டா ஆணலாதவர் (525) என்பவையே அவை, இந்த நிலை இல்லாமலும் உடலளவில் (புறத்தளவில்) வழிபாடு செய்பவர்கள் சமுதாயத்தை ஏமாற்றுபவர்கள்; ஆதலின், அவர்களைக் கண்டு, தாம் அஞ்சுவதாகப் பாடியுள்ளார்.