பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 39 திருவாதவூரர் அவ்வாறு செய்யவில்லை. இரண்டு தவறான காரியங்களைச் செய்தார். ஒன்று, வாயின் அளவுக்கு ஏற்பக் கையில் எடுக்காமல் வாரிக்கொண்டார். மற்றொன்று, மென்று சுவைத்து உண்டால், கால தாமதம் ஆகும் என்று கருதி விழுங்கத் தொடங்கினார். கிடைக்கும் உணவைக்கூட முறைப்படி எடுத்து உண்ணாமல் வாரி விழுங்கினால் விக்கத்தானே செய்யும்? எவ்வளவு சிறந்த உணவாயினும் விழுங்கினால் விக்கத்தான் செய்யும். குருநாதர் வழங்கியது அருளார் அமுதாக இருப்பினும் திருவாதவூரர் அதனை வாரிக்கொண்டு விழுங்கத் தொடங்கினார். அது விக்கிக்கொண்டது. விக்கிக் கொண்டதற்குக் காரணம் குருநாதரோ அல்லது அவர் வழங்கிய அருளோ இல்லை. இந்நிலை ஏற்படத் தாமே காரணம் என்பதை அறிவுறுத்துவார்போல் வினையேன்” என்றார். குருநாதரும் அடியார்களும் மறைந்துவிட்டனர். அதன் பயனாக அருளார் அமுதம் கிடைப்பது தடைப்பட்டுவிட்டது என்று அடிகளார் கருதினார். அதனால்தான் 'விதியின்மையால் என்றார். வழியோடு போன அவரை, குருநாதர் இருக்கும் இடத்திற்கு அழைத்துவந்தது விதி; அவரைக் காணுமாறு செய்ததும் அதே விதிதான்; அவர் திருவடிகளில் வீழுமாறு செய்ததும் அதே விதிதான்; அவருடைய திருவடி சம்பந்தம் பெறுமாறு செய்ததும் அதே விதிதான்; அடியார் கூட்டத்திடை இருக்குமாறு செய்ததும் அதே விதிதான். குருநாதர் விழிகளிலிருந்து பாய்ந்து ஓடிய கருணை வெள்ளம் இவரை நோக்கிப் பாய்ந்ததும் அதே விதியினால்தான். எல்லையற்ற ஆனந்தத்துடன் புசிக்கத் தொடங்கியதும் அதே விதியினால்தான். .