பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே (திருமுறை: 4.23.) என்றும் நாவரசர் பெருமானும், நின்கோயில்வாசல் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்டேனே' (நாலாயிர:685) என்று குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ளமை இங்கு நோக்கத் தகும். இக்கருத்துக்கு அரண்செய்யும் முறையில் அடிகளார் ‘மண்ணார்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்னக் கண்ணார உய்ந்தவாறன்றே உன் கழல் கண்டே' (திருவாச. 547) என்று பாடியருளிமை நோக்கத்தக்கது. இம்மண்ணிலே தோன்றிய பிறவியை அறுத்து வீட்டுலகு தருகிறேன். (ஆள்வாய்) நீ வா என்று அழைத்தாலும் உன் அருகில் வந்து இப்பிறவியை அறுப்பதைக் காட்டிலும் நான் விரும்புகின்றது ஒன்றுண்டு. அது எது தெரியுமா? இப்பிறவியில் 'உன் கழல் கண்ணாரக் கண்டு உய்வதையே நான் விரும்புகின்றேன்’ என்று கூறுவதால், பிறவியைப் போக்குவதைவிட இப்பிறவியில் இருந்துகொண்டே அவன் திருவடிகளை ஒயாது தரிசித்துக்கொண்டிருத்தலே சிறப்புடையது என்பதைக் கூறினாராயிற்று. 12ஆம் நூற்றாண்டில் வந்த சேக்கிழார் பெருமான் முன்னர் இருந்த அடியார்கள் கூறிய இக்கருத்தை மனத்தில் வாங்கிக்கொண்டு, உண்மை அடியார்களின் பொது இலக்கணம் என்ன என்பதை கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்' (பெ.பு:திருக்கூட்ட8) என்று பாடியருளினார். ‘எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே' (549) என்றும், ‘மற்றறியேன் பிறதெய்வம்' (550) என்றும் வரும் தொடர்கள் இதுவரையுள்ள பாடல்களில் அதிகம் காணப்பெறாத ஒரு புதிய கருத்தாகும். இதனைச் சொல்லவேண்டிய தேவை என்ன ? -