பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 முன்னரும் சில பாடல்களில் இக்கருத்தை வெளியிட்ட அடிகளார் இங்கும் அதனை வெளிப்படையாக விளக்கு கின்றார். பஞ்சாய அடிமடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர (55) 'நடுங்குவேன் நின்னருளால் உய்ஞ்சேன்’ என்று கூறுகிறார். அந்த உய்தல் தம்முடைய முயற்சியால் அன்று என்பதைக் கூறவந்த அடிகளார், நின் அருளால் என்ற தொடரின் மூலம் மனித சமுதாயம் முழுவதற்கும் இந்த இடரிலிருந்து விடுபட ஒரு வழியைக் காட்டுகிறார். அவன் அருளால்தான் பால் உணர்வு என்னும் இடரிலிருந்து நீங்கி உய்ய முடியும் என்பதைத் தம் அனுபவரீதியாக எடுத்துக் கூறியுள்ளார். ஆதலின் இது மனித சமுதாயம் உய்ய ஒரு வழிகாட்டி ஆகும். ஒன்பதாவது பாடலில் (554) 'எனக்கு இங்கு அருள் என்று வேண்டுகிறார். எதனை அருள வேண்டும்? பிறவியை வேரறுத்தல், திருவடிக் காட்சி தருதல், திருவடி தீட்சை அருளல், உபதேசம் செய்தல், இரும்பு மனத்தை உருக்குதல், நைந்துநைந்து உருகிப் பாடுதல் என்ற இவற்றுள் ஏதாவது ஒன்றை அருள்வாயாக என்று கூறினாரா என்றால், 'இல்லை’ என்ற விடைதான் வரும். அப்படியானால் வேறு எதனை அருளவேண்டும் என்கிறார்? அவருடைய சொற்களாலேயே அதனைக் காணலாம். மலர்ப்பாதம் வளர்ந்து மனத்தில் உருக்கத்தை உண்டாக்க அதன் பயனாக நான்' 'எனது என்பவை அழிந்து, மானஅவமானம், பெருமை-சிறுமை என்பவையும் உடன் அழிய, தம்மை இழந்த நிலையில், சிவபெருமான் சிவபெருமானென்று அலறிக்கொண்டு தெருவுதோறும் அலையவேண்டும் என்கிறார். இது என்ன புதுமையான வேண்டுகோள் ? மேலே கூறிய பிறவி போக்குதல் முதலான எந்த நிலையிலும்