பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஆசைப் பத்து (ஆத்தும இலக்கணம்) திருப்பூவல்லியில் பேராசையாம் இந்தப் பிண்டம் அற' (திருவாச:284) என்று பாடிய பெருமான் திருப்பெருந் துறையில் பத்துப் பாடல்களிலும் ஆசைப்பட்டேன் கண்டாய்” என்று பாடுவது நம் சிந்தனையைத் துண்டுவதாகும். அடிகளார் காலத்திற்குச் சற்று முன்னர் வாழ்ந்த திருமூலர் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’ (திருமந்: 2554) என்று பாடியுள்ளார். - ஆசை அறுக்கப்படவேண்டும் என்றுதான் பெரியோர் பலரும் பாடியுள்ளனர். அப்படியிருக்க ஒரு பதிகம் முழுவதும் ஆசைப்பட்டேன் என்று அடிகளார் பாடுவதன் நோக்கமென்ன? இப்பதிகத்திற்குத் உட்தலைப்புத் தந்த பழையவர்கள் ஆத்தும இலக்கணம்' என்று கூறியுள்ளார்கள். பின்னே வந்த உரையாசிரியர்கள், உயிர்கள் வீடுபேற்றை அடைய ஆசைப்படுதலின் இப்பதிகத்திற்குப் பழையவர்கள் தந்த ஆத்தும இலக்கணம்’ என்ற தலைப்புப் பொருந்தும் என்று கூறியுள்ளனர். இவ்விரண்டையும் ஏற்றுக்கொள்வதற்கில்லை. 50ৈ3F என்பது மனத்தின்பாற்பட்ட தாகும். மனத்தளவில் தோன்றும் இயல்பான, தேவையான ஆசைகள் விஸ்வரூபம் எடுக்கும்போது பேராசையாக மாறுகின்றன. ஆற்றில் இயல்பாக நீர் ஓடினால் பயிர்க்ள் விளைய அது உதவும். அதே ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால் அதுவே பயிர்களை அழிக்கும். தி.சி.சி.1V 4