பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைப் பத்து 47 மருத்துவர்போல அடிகளார் கூறியுள்ளது வியப்பைத் தருவதாகும். திருப்பெருந்துறையில் அடியார்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தும் அவர்களுடன் செல்ல முடியாமல் போனதற்கு இப்பருவுடலே காரணம் எனக் கருதுகின்ற அடிகளார், இந்த உடம்பை விட்டு வெளியேவர விரும்புகிறார்; அதனாலேயே 'குப்பாயம் புக்கு இருக்ககில்லேன்' என்று பாடுகிறார். இதற்கு முந்தைய பாடலில் இங்கே வா’ என்று என்னை அழைப்பாயாக என்று வேண்டிக்கொண்டவர் இப்பாடலில் இன்னும் ஒரு படி மேலே சென்று காண ஆசைப்பட்டேன் கண்டாய்” என்று பாடுகிறார். அதாவது தம்மை வாவென்று ஏன் அழைக்க வேண்டும் என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல, வந்து காண ஆசைப்பட்டேன் என்று முடிக்கின்றார். 420. சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக் கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குரு மணியே தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி ஆ ஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 3 சீ வார்ந்து - சீழ் ஒழுகுகின்ற இந்தப் பாடலில் 'இச்சிறு குடில்(உடம்பு) சிதையக் கூவாய்' என்று வேண்டினார். இதனைக் கூறியவுடன் அடிகளார் மனத்தில் ஒர் ஐயம் கலந்த அச்சம் பிறந்தது. சிறுகுடிலைத் தந்தவன், அவனாக வேண்டும்பொழுது இதைச் சிதைப்பானே தவிர, இதைச் சிதைத்துவிடு என்று