பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தொடர்பு கொண்டோ, இச்செயலை உடையாரின் ஆணைக்கு உட்பட்டோ நடைபெறுவதே இல்லை. இவ்வளவு விரிவாக இதனை அடிகளார் எடுத்து வைத்து இறுதி அடியில் புக்கு நிற்பது என்று கொல்லோ என்று சொல்வதால், முன்னர்ப் பலமுறை தமக்கு நிகழ்ந்த இந்த இறைப் பிரேமைச் செயல்களைக் காட்டி மறுபடியும் அந்நிலைமை என்று வருமோ என்று வினவுவதாகும், இப்பாடல். . . . - 446. தாதாய் மூ ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்தனை ஆண்ட பேதாய் பிறவிப் பிணிக்கு ஒர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் ஏதுஆம் மணியே என்று என்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாதப் போது ஆய்ந்து அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 9 பாதப்போது ஆய்ந்து-திருவடி மலரை நினைந்து நினைந்து, ஆய்தல்-சிந்தித்தல். . “தாதாய், மூ ஏழ் உலகுக்கும் தாயே, நாயேன்தனை ஆண்ட பேதாய்’ என்ற பகுதி திருவாசகத்தின் ஈடினையற்ற சிறப்பிற்கும், அடிகளாரின் ஆன்மீக வளர்ச்சியின் எல்லைக்கும் ஒர் எடுத்துக்காட்டாகும். தந்தையே! மூ ஏழ் உலகிற்கும் தாயே! என்று கூறிவிட்டு, அடுத்தபடியாகப் பேதாய் என்று குறிக்கின்றார். தாதையாகவும், தாயாகவும் உள்ள ஒருவனைப், பேதை என்று கூறுவது எவ்வாறு பொருந்தும் முற்றறிவினன் என்று அவனைக் கூறுவர்; ஆனாலும், அவனும் அவளும் கருணைக்கடல்தான். பிரபஞ்ச - காரணனாய் அனைத்தையும் தோற்றி, வளர்த்து, ஒடுக்கும் அவன்,