பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112-திருவாசகம் சில சிந்தனைகள் 5 செயல்களைச் செய்வதால் செந்தீ என்றாரேனும் ஏனைய செந்தீயிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்ட, தேனுந்து செந்தி என்றார். 618. ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ பார்க்கோ பரம்பரனே என் செய்கேன்- தீர்ப்பு அரிய ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான் தான் என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து 2 இப்பாடலின் முதலிரண்டு அடிகளும் பின்னிரண்டு அடிகளும் எளிதில் இணைத்துப் பொருள்கொள்ள முடியாதபடி தனித்தனியே நிற்கின்றன. இப்பொழுது பின்வருமாறு பாடலைக் கொண்டு. கூட்டுச் செய்துகொள்வது நலம். தீர்ப்பரிய ஆனந்தமால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்தான் என்பார் ஆரொருவர்? (அவரைத் தாழ்ந்து ஆர்க்கோ அரற்றுகோ? ஆடுகோ பாடுகோ? பார்க்கோ பரம்பரனே (இவற்றை அல்லாமல் வேறு) என்செய்கேன்? 'பரம்பரனே! இடையிடையே வந்துபோகாமல் நிலைபேறுடையதாய் (தீர்ப்பரிய) உள்ள ஆனந்தமாகிய பித்தை (மால்) ஏற்றக் கூடியவன் பெருந்துறை நாயகன் ஒருவனேதான் என்று யாரேனும் ஒருவர் என்பால் கூறுவாராயின், அவரைப் பணிந்து (தாழ்ந்து) புகழ்வேனோ? அவர் செய்த உதவியை நினைந்து அரற்றுவேனோ? ஆடுவேனோ? பாடுவேனோ? எனக்கு வழிகாட்டிய அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பேனோ? என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கின்றேன்’ என்றபடி, 619. செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன். வையத்து இருந்து உறையுள் வேல் மடுத்து என் சிந்தனைக்கே . கோத்தான் பெருந்துறையில் மேய பிரான் 3