பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருவாசகம் சில சிந்தனைகள்: ஆனால், இவற்றை உண்டாக்கிய கர்த்தா ஒரே விநாடியில் இதனைச் செய்தான் என்பதை ஆக்கி’ என்ற சொல்லால் குறிப்பிட்டார். இச்செயல் நரி குதிரை என்பவற்றோடு நில்லாமல் கூர்தல் அறம் உலகம் முழுவதும் நடைபெறும் படியாகச் செய்தான் என்பதை 'ஞாலமெல்லாம் நிகழ்வித்து என்ற சொற்களால் குறிப்பிட்டார். இத்தகைய பேராற்றல் படைத்த ஒருவன், மதுரை மாநகரிலுள்ள அனைவரும் தன்னைக் கண்டவுடன் தம்மை மறந்து குதிரைச் சேவகனாகிய தன்னில் லயிக்குமாறு செய்துவிட்டான் (பிச்சது ஏற்றி). இவற்றையெல்லாம் நினைக்கும்பொழுது இவற்றைச் செய்தவனை எவ்வாறு விளிப்பது என்ற ஐயம் அடிகளாருக்கே வந்துவிட்டது. அவனை உயர்திணை என்பதா, அஃறிணை என்பதா? இவை இரண்டுமாக இருப்பவன் அவன்தான் என்பதை அறிவிக்கவே 'பெருந்துறையாய் என்ற உயர்திணை விளியையும் 'அரிய பொருளே என்ற அஃறிணை விளியையும் அவனுக்கே ஏற்றுகின்றார். இந்த எண்ணம் மனத்தில் பெருகவே 'அவிநாசி அப்பா என்று உயர்திணையிலும் பாண்டி வெள்ளமே என்று அஃறிணையிலும் விளிக்கின்றார். அடுத்து, இரண்டு திணையிலும் கொள்ளப்படாத "பரஞ்சோதி என்று விளிக்கின்றார். சோதி என்று மட்டும் குறிப்பிட்டிருந்தால் அஃது அஃறிணையாகும். பெருந்துறை நாயகனை நினைக்கும்பொழுது அவனுடைய பெருமை, எளிவந்த தன்மை என்ற இரண்டும் மாறிமாறி அடிகளார் உள்ளத்தில் தோன்றுதலின் செய்வது ஒன்றும் அறியேனே என்றார். முன் வந்த பாடல்களில் அவர் வேண்டிக்கொண்ட எதுவும் நடைபெறாமல் போகவே, நம்பிக்கை இழந்த நிலையில் செய்வது ஒன்றும் அறியேனே என்று முடிக்கின்றார்.