பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருவாசகம் சில சிந்தனைகள் 5 நடக்க முடியாதவை, மனிதர்களுக்குக் கிட்டாதவை என்று அடிகளார் அந்த நேரத்தில் நினைக்கவில்லைபோலும். மிகச் சிறப்புடையதாயினும், அது ஏதோ நடைபெற வேண்டிய ஒன்று என்று போகிறபோக்கில் அதை ஏற்றுக் கொண்டார்போலும். அவ்வாறு நினைத்தது பெருந்தவறு என்ற நினைவு பின் நாட்களில் அவரை ஆட்டிப்படைத்ததனால்தான்போலும் 'வந்தெனைப் பணிகொண்டபின் மழக் கையிலங்கு பொற்கிண்ணம் என்றலால் அரியை என்றுனைக் கருதுகின்றிலேன் (95) என்று பாட நேர்ந்தது. குருநாதர் முதலிய காட்சிகள் எல்லாம் மறைந்து, தாம் தமியராய் விடப்பட்ட நிலையில் எல்லையற்ற துயரத்திற்குள்ளாகி, நடந்தவற்றை பின்னோக்கிச் சிந்திக்கிறார். அப்பொழுதுதான் எல்லாம் கடந்த ஒருவன் மெய்யனாய் வெளிகாட்டி நின்றது ஒரு மாபெரும் அற்புதம் என்ற நினைவு மெள்ள மெள்ளப் புலர்கின்றது. ஆனால் இந்த அற்புதம் இப்பொழுது நடைபெறவில்லை; என்றோ நடந்தது. அன்று, அது நடைபெறமுடியாத அற்புதம் என்பதை அறியாமல் இருந்துவிட்டேனே' என்ற பச்சாதாப உணர்ச்சி இப்பொழுது ஏற்படுகிறது. அதனால்தான், இது அற்புதம் என்பதை அன்று அறியாமல் போய்விட்டேனே' என்று பாடுகிறார். பதிகத்தின் முதல் இரண்டு பாடல்கள் அற்புதம் விளம்பேனே' என்று முடிந்து, ஏனைய பாடல்கள் "அற்புதம் அறியேனே என்று முடிவதிலும் ஒர் அற்புதம் அமைந்துள்ளது. ஒரு பொருளைக் கண்டமாத்திரத்தில் அதுபற்றி முழுவதும் அறியாமல்கூட, அதனை வியந்து பேசலாம். அவ்வாறு பேசுதல் அக்காட்சி நடைபெறும் பொழுதே நடைபெறக்கூடிய ஒன்று. எதற்கும் வெளிப்படாமல், உருவம் வடிவு என்பவற்றைக் கடந்து நிற்கும் ஒரு பொருள், மெய்யனாய் நின்றது.