பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_207 இதனை அறிந்துவிட்ட காரணத்தால், மானிட உருவில் வாழ்ந்தாலும், இவர்கள் அனைவரும் தம்மால் எசமானர்கள் (பிரான்) என்று ஏற்றுக்கொண்டு வணங்கத்தக்கவர்கள் என்று கூறுகிறார் அடிகளார். இந்த அடியார்கள் சிலரின் உண்மையான இயல்பை, ஊடுருவி நோக்கும் தம் சக்தியால் அடிகளார் அறிந்துகொண்டார். ஆதலின், தம்முடைய எசமானோடு ஒப்பவைத்து எண்ணத் தகுந்தவர்கள் இவர்கள் என்பதையே எம்பிரான் ஆவாரே என்று பாடுகிறார். அதனாலேயே இப்பதிகம் திருவார்த்தை என்ற பெயரைப் பெற்றதுபோலும், எந்தக் குறிப்பிட்ட ஒரு பெயராலும், எந்த ஒரு வடிவத்தாலும் முழுமுதற் பொருளை அடக்கிக் காட்ட முடியாது; அது நாம, ரூபம் கடந்தது; வாக்கு, மனோலயம் கடந்தது என்றெல்லாம் கூறுவதை இந்த அருளாளர்கள் நன்கு அறிந்திருந்தனர். இப்படி இலக்கணம் வகுத்துவிட்டால் மனித மனம் அதைப் பற்ற முடியாமல் விட்டுவிடும் என்பதை அறிந்திருந்த இந்த அருளாளர்கள் முழுமுதற்பொருளுக்கு ஒரு வடிவு கற்பித்தனர். பின்னர் மனித மனம் பல்வேறு நிலைகளில் இருப்பதை அறிந்த இவர்கள் அந்த அந்த நிலைகளுக்கு ஏற்பப் பல்வேறு வடிவங்களைக் கற்பித்தனர். உருவ வழிபாட்டின் சிறப்பே மனித மனத்திற்கு அது உகந்ததாக இருப்பதுதான். எங்கும் நிறைந்திருக்கின்ற அப்பொருள், கருணையே வடிவானது ஆதலின், மனிதர்கள்மாட்டுக் கொண்ட கருணையால் தன் நிலையை விட்டுக் கீழிறங்கி வந்து மானிட உருவைத்தாங்கி உயிர்களுக்குச் செய்யவேண்டியவற்றைச் செய்கின்றது என்றும் கூறினர். அந்த அளவில் நில்லாமல் உயிர்வர்க்கம் அனைத்தும் ஒன்றாக இருத்தலின் விலங்குகட்கு அருள்செய்யப்