பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} பின்னுரை_225 புத்ததேவனும் கூறிச்சென்றனர். வெகுளியை விட்டால், வேட்கையை விட்டால் பிறப்பு நீங்கிவிடும் ஆதலால் ‘விடுமின் வெகுளி வேட்கை நோய்' என்றார். நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர் நோயாளியின் உடலில் புறத்தே தோன்றும் மாறுபாடுகளை குறிகளை) முதலில் கூர்ந்து கவனித்துவிட்டு, இந்த மாறுபாடுகளைத் தோற்றுவிப்பது இன்ன நோயாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அதாவது, உடலினுள் மறைந்துநிற்கும் நோயை அறிய உதவுவது புறத்தே தோன்றும் மாறுபாடுகளாகும். அதேபோல, மனத்தின் ஆழத்தில் புதைந்து நிற்கும் வேட்கை அல்லது ஆசையின் காரணமாகவே, அதை நிறைவேற்ற முடியாதபொழுது, சினம் பிறக்கிறது. உள்ளே உள்ள! வேட்கைநோயைப் பிறரும் அறியுமாறு செய்யும் வெளிப்பாடு சினமாதலால் அதனை முதலிற் கூறினார் ώΥ&35Τ:5. பொருள்களின்மேல் ஏற்படும் பற்று எவ்வாறு சினமாக வெளிப்பட்டு அறிவை மழுங்கடித்துச் செய்யத்தகுவது இன்னது தகாதது இன்னது என்று பகுத்து உணரும் அறிவை மடக்கிவிடுதலால், மனிதன் தவறுகளைச் செய்து பாவங்களுக்கு உள்ளாகிறான் என்று கீதையும் பேசுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழும் காலம் எவ்வளவு என்பது மறைக்கப்பட்டுள்ளது. எனவே, மிக ஓர் காலம் இனியில்லை’ என்றார். ஆகவே, இப்பொழுது செய்யவேண்டியது என்ன என்பதை அடுத்துக் கூறுகிறார். இறைவன் திருவடியை அடைய ஒருப்படுமின் என்று கூறுகிறார். இவ்வாறு ஒருப்படுவதற்குத் தடையாக உள்ளது வெகுளியும், வேட்கையும் ஆதலால் அவற்றை விடுமாறு உபதேசித்துவிட்டு, இறைவன் திருவடி அடையச் சாத்தோடு (கூட்டத்தோடு) ஒருப்படுமின் என்றார். சாத்தோடு என்று சொல்லவேண்டிய காரணமென்ன?