பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_265 மந்திரங்களையும் புகுத்திய பெருமை திருமூலரையே சாரும். யோக மார்க்கத்தைப் பெரிதுபடுத்திக் கூறியவரும் திருமூலரே ஆவார். என்ன காரணத்தாலோ திருமூலரின் இப்புதியமுறை தமிழகத்தில் வேர்கொள்ளாமலே போயிற்று. இதற்கு ஒரேயொரு புறநடை மணிவாசகரே ஆவார். திருமூலர் காட்டிய முறையில் குருவே அனைத்தும் என்று கருதிப் பாடிய பெருமை அடிகளாருடையதாகும். குரு பரம்பரையின் முதற்குரு நந்தி என்று அழைக்கப்பட்ட சிவபெருமானே’ என்ற திருமூலர் கருத்துக்கு விளக்கவுரை போன்று அமைந்தன திருவாசகத்தின் பல பாடல்கள். புவனியில் சேவடி தீண்டிய குருநாதரைச் சிவனென யானும் தேறினன் என்று அடிகளார் பாடுவது மேலே கூறிய கருத்தை வலியுறுத்தும். குருநாதர் வடிவில் வந்த சிவபெருமான் பல்வேறு வடிவங்களை மேற்கொண்டு பல்வேறு திருவிளையாடல் களைச் செய்தான் என்பதைத் திருவாசகத்தில் கீர்த்தித் திருவகவல் தொடங்கிப் Ljół) பாடல்கள் பேசிச்செல்கின்றன. மானிட வடிவில் இறைவன் வந்தாலும் அவனை இனங் கண்டுகொள்வது அவ்வளவு எளிதான காரியமன்று என்பதை ஒருவகையில் விளக்குவதே திருப்படையாட்சியாகும். மீன்வலை வீசிய கானவனாக வந்தாலும் ஏனைய கானவர்களிலிருந்து அவனை வேறுபடுத்தி அவன் திருவடிகளைக் கண்டுகளிக்கும் ஆற்றல் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. இனங் கண்டுகொண்டாலும் அவன் திருவடிகளை ஈடுபாட்டுடன் தரிசிக்காவிட்டால் என்ன நிகழும் என்பதைத் திருப்படையாட்சியின் முதற்பாட்டில் (635)