பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_0-329 முக்கியமானவை சிதம்பரம், இராஜராஜேச்சுவரம், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய மூன்றையும் ப்ற்றியதாகும். கங்கைகொண்ட சோழபுரம் பற்றிப் பாடியதால் இப்பதிகம் இராஜராஜச்சோழன் மகனான இராஜேந்திரன் காலத்தில் பாடப்பெற்றிருக்க வேண்டும். காரணம் அவன்தான் இந்தக் கோயிலைக் கட்டியவன். இவையும் திருவிசைப்பாவில் இடம்பெறுவதால் ஒன்பதாம் திருமுறையென்று சொல்லப்பெறும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகியவை பதினொன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டே தோன்றியிருக்க வேண்டும். எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியோடு மூவர் முதலிகள் காலம் முடிந்துவிட்டது. ஒன்பதாம் திருமுறை பதினொராம் நூற்றாண்டில் தோன்றிற்று. அப்படியானால் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய திருவாசகம் எப்பொழுது எட்டாம் திருமுறை என்ற பெயரில் தொகுக்கப்பெற்றது என்பது ஆராய்ச்சிக்குரியது. இதுபற்றிய முடிவான கருத்து எதுவும் எட்டப்படவில்லை. தேவாரங்கள் மட்டும் கி.பி. 750 முதல் திருப்பதிகம் என்ற பெயரில் வல்லம், எறும்பியூர் போன்ற சில கோயில்களில் பாடப்பெற்றன என்பதை அறிகிறோம். திருமந்திரமும், திருவாசகமும், அடுத்தடுத்து முன்பின்னாகத் தோன்றியவை. அப்படியிருக்க, திருவாசகத்தை எட்டு என்று கணக்கிட்டது சரி. திருவாசகத்திற்கு அறுபது எழுபது ஆண்டுகள் முன்னர்த் தோன்றிய திருமந்திரம் எவ்வாறு பத்தாம் திருமுறை என்று கணக்கிடப்பெற்றது? பதினொராம் நூற்றாண்டில் தோன்றிய திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறை என்று வைக்கப்பெற்றது எவ்வாறு பொருந்தும்? காலவரிசையில் முதல் ஏழு திருமுறைகள் வைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைவைப்புத் தொடர்ந்திருக்குமேயானால் எட்டாவது இடத்தைத் திருமந்திரத்திற்கும், ஒன்பதாவது இடத்தைத்