பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಟ್ತರು-43:38 தேவாரப் பாடல்களுக்கும் திருவாசகத்திற்குமுள்ள வேறுபாட்டை அறிய முற்படுவது நலம். வேறுபாடு என்று கூறியவுடன் ஒன்றை உயர்ந்தது என்றும் மற்றொன்றைத் தாழ்ந்தது என்றும் கூறுவதாக யாரும் திணையவேண்டா. சிவப்பும் பச்சையும் மாறுபட்ட நிறங்கள் என்றாலும், இவற்றிடையே உயர்வு தாழ்வு எதுவுமில்லை. தேவார திருவாசகங்கள் இடையேயுள்ள வேறுபாடும் இதுபோன்றதுதான். தேவாரப் பாடல்களையும் அவற்றைப் பாடியவர்களையும் எடுத்துக்கொண்டு பார்த்தால் பாடியவர், பாடல் என்பவற்றோடு பாடுபொருளாக அமைந்துள்ளவன் இறைவன் என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடியும். பாடியவர்களாகிய இவர்கள், இறைபக்தியில் ஆழங்காற்பட்டவர்கள் என்பதிலோ அவன் அருளை முழுவதும் பெற்றவர்கள் என்பதிலோ எந்த ஐயப்பாடும் இல்லை. என்றாலும், தேவாரப் பாடல்களில் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் காணமுடியும். பாடிய அடியார்கள், பாடிய பாடல்கள், பாடு பொருளாகிய இறைவன்.அதாவது அடியார்கள், பாடல்கள், இறைவன் என்ற மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் காணலாம். இந்த மூன்றினிடையே பெருத்த இடைவெளி எதுவுமில்லை என்ற்ாலும், இம்மூன்றும் தனித்தனியேதான் இருந்தன. மற்றொரு வகையாகக் கூறினால் இப்பாடல்களைப் பாடியவர்கள் எல்லாப் பாடல்களிலும் கரைந்துவிடவில்லை. இடைவெளியே இல்லையென்று சொல்லுமளவிற்கு, இம்மூன்றும் நெருங்கியிருந்தாலும் அடியார்கள், பாடல்கள், இறைவன் என்ற மூன்றும் தனித்தனியே உள்ளன என்பதை ஆய்பவர்கள் அறியமுடியும். இந்த நிலையில் திருவாசகப் பாடல்கள், அதனைப் பாடிய அடிகளார். பாடுபொருளாகவுள்ள