பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை e_391 பாடுகிறார்? கரந்து நிற்கின்ற ஒரு பொருளைக் கண்டு கொண்டனன் என்று கூறுவது வியப்பைத் தருகிறது. இந்தக் காட்சி உண்மையானது என்பதை விளக்க களித்தனன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இதுவும் ஆண்டு கொண்டதால் நிகழ்ந்த அதிசயம். சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாய் நிற்கின்ற ஒன்றைக் கருத்தளவிற்கூடச் சிந்திப்பது கடினம். ஆனால், ஆண்டுகொள்ளப்பட்ட காரணத்தால் அந்த ஒன்றை நினைப்பற நினைக்க முடிந்தது என்கிறார். அப்படி நினைந்தபொழுது அதன் முடிவாக ஒரு பேருண்மை வெளிப்பட்டது. அது என்ன தெரியுமா? ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்றில்லை’ (394) என்பதேயாகும். பதிகத்தின் முடிவில் தந்தது உன் தன்னைக் கொண்டது என்தன்னை (397) என்று பாடுவது ஆட்கொள்ளப்பட்டதன் முழுத்தன்மையை விளக்கும் முறையில் அமைந்துள்ளது. அடிகளாரை ஒரு சில விநாடிகளில் ஆட்கொண்டு, மணிவாசகராக மாற்றி உலவவிட்டார் குருநாதர். இப்பொழுது ஒர் ஐயம் தோன்றுகிறது. உலவ விடப்பட்ட மணிவாசகர் யார்? பழைய திருவாதவூரரின் மறு அவதாரமா? அது இல்லையென்றால், இந்தப் புதிய வடிவம் யார்? ஆழ்ந்து நோக்கினால் திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அடிகளாருடைய உடலில் குடிகொண்டிருந்தது அவருடைய ஆன்மாவா மற்றொன்றா என்ற வினாவிற்கு விடை கூறுபவர்போலத் தந்தது உன்தன்னை என்று பாடுகிறார். 'உன்தன்னை' என்று கூறியதால், கொடுத்தவன் முழுவதுமாகத் தன்னைக் கொடுத்துவிட்டான் என்பதை விளக்கிவிட்டார். அப்படியானால் இப்பொழுது அடிகளாருடைய உடலில் இவருடைய சொந்த ஆன்மாவும் உள்ளே புகுந்த குருநாதரும் ஆகிய இருவரும் ஒன்றாக் ஒரிடத்து உள்ளனர் என்று நாம் நினைக்கத் தொடங்கினால், அது தவறு என்கிறார் அடிகளார்?