பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 திருவாசகம் சில சிந்தனைகள்-5 விரிவாகப் பேசியதற்கு ஒரு காரணமுண்டு. பதிக வைப்பு முறையில் இவை இரண்டைத் தனியே பிரித்ததற்கும் ஒன்றையடுத்து ஒன்றை வைப்பதற்கும் உள்ள காரணங்களைச் சிந்திக்கும்பொழுது தோன்றிய சிந்தனைகள் ஆகும் இவை. கோத்தும்பியினிடம் உடனடிப்பயன், சுற்றுச் சூழ்நிலை, தமக்கு ஏற்பட்ட பயன் என்றெல்லாம் இவ்வளவு விரிவாகக் கூறியவர் குயிற்பத்தில் இந்த அடிப்படையையே மாற்றி விடுகிறார். எந்த ஓர் இடத்திலும் சில வினாடிகளுக்கு மேல் தங்காமல் பகல் முழுவதும் சுற்றித் திரியும் இயல்புடையது வண்டு. அதனுடைய இயல்புக்கேற்பக் கோத்தும்பிப் பாடல்களை அமைத்தார். வாழ்நாள் முழுவதும் அமைதியே இல்லாமல் சுற்றித்திரியும் வண்டிற்கு இது சரி. இந்த இயல்பிற்கு முற்றிலும் மாறுபட்டது குயில். பிறரெல்லாம் காணச் சுற்றித் திரியும் வண்டிற்கு எதிராக நெடிய மரக்கிளையில் தன்னை யாரும் காணாதபடி அமர்ந்துகொண்டு கீதம் இசைக்கும் இயல்புடையது குயில். உச்ச ஸ்தாயியில் ஒயாது ரீங்காரமிடும் வண்டின் குரலை நீண்ட நேரம் தொடர்ந்து கேட்க முடியாது. இதன் எதிராக எங்கோ மறைந்து நிற்கும் குயிலின் குரலைக் கேட்பவர்கள் காலம் போவது தெரியாமல் கேட்டுக்கொண்டே இன்புறுவர். குயிலுக்கு ஒரு பழக்கம் உண்டு. நீண்ட தூரம் பறந்து செல்லும் இயல்புடையதன்று அது. எனவே, சென்று ஊதாய்’ என்று வண்டைப் பார்த்துக் கூறும் அடிளார் குயிலைப் பார்த்துப் பேசும்பொழுது "வரக் கூவாய்' என்று பாடுகிறார். - 'வரக் கூவாய்' என்று பாடுவதால் குயிலுக்கு ஒர் ஐயம் உண்டாகுமே? முதற் பாடலிலேயே "பாதம்