பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 திருவாசகம் சில சிந்தனைகள்-5 என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் காணலாம். இக்கருத்தைத் தாயுமானவப் பெருந்தகையும் தம்முடைய முயற்சிகளையெல்லாம் எடுத்துக்கூறி இறுதியாகச் சாமி! நீ அறியாததோ (சச்சிதா:5) என்று பாடுவதைக் காணலாம். இயல்பாகவே மனிதரிடத்து அமைந்திருக்கும் ஆசையை அடிகளார் எப்படி மடைமாற்றம் செய்கிறார் என்பதை அறிந்துகொண்டால், இதனை ஏன் இத்தொகுப்பில் முதலில் வைத்துள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அடுத்திருப்பது பிரார்த்தனைப் பத்தாகும். ஆசை மடைமாற்றம் செய்யப்படும்பொழுது அங்கே தன்னலமும், 'நானும் கொஞ்சம் கொஞ்சமாக அழிகின்றன. அவற்றின் வலுக் குறையக் குறைய ஆசை பிரார்த்தனையாக மாறுகிறது. அடிகளாரின் பிரார்த்தனைப் பத்தை நம் போன்ற சாதாரண மக்கள் அன்றாடம் செய்யும் பிரார்த்தனையோடு வைத்து எண்ணக்கூடாது. நம் போன்றவர்கள் ஆசை, உலகப் பொருள்பற்றியதுதான். அது கிடைக்க வேண்டும் என்று அரைகுறை மனத்துடன் இறைவனிடம் வேண்டுகோள் விடுப்பதைப் பிரார்த்தனை என்று சொல்லக்கூடாது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால், அடிகளாரின் ஆசைப் பத்தின் பின்னர் ஏன் பிரார்த்தனைப் பத்தை வைத்தோம் என்பது நன்கு விளங்கும். இப்பத்தின் முதற்பாடல் எவ்வாறு முடிகிறது? உலவா இன்பச்சுடர் காண்பான் அலந்து போனேன்' (485) “எவ்வளவு ஆசைப்பட்டும் அந்த இன்பச்சுடரைக் காணமுடியவில்லை என்றால் குறை என்மாட்டுள்ளது என்பதை உணர்ந்தேன். அக்குறை என்ன என்பதையும் அறிந்துகொண்டேன். அச்சுடரைக் காணவேண்டும் என்ற ஆர்வம் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை. ஆகவே, இப்பொழுது நான் உன்னிடம் பிரார்த்திப்பது ஒன்றே ஒன்றுதான். நின்னை அடையவேண்டும் என்ற என்