பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னிப் பத்து-59 வீடுபேற்றையும் தருதல் ஆகிய இத்தனையையும் தந்த ஒருவனைப் பைத்தியம் என்று சொல்வதில் தவறில்லை என்ற அழகிய கருத்துப்பட இப்பாடல் அமைந்திருத்தலின், நான்காம் அடியின் தொடக்கத்தில் மத்தன் (பைத்தியம்) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு சொள்ளாமல் அத்தன்' என்று பாடம் கொள்வாரும் உளர். வீடுபேறு என்பது தேவர் உலகத்தில் சென்று துய்ப்பது என்ற கொள்கையிலும் மாறுபட்டு மூவுலகத்திற்கும் அப்பாற்பட்டது என்ற கருத்து இந்நாட்டைப் பொறுத்தவரை ഒ്ക-ഖ് வைணவர் ஆகிய இருவரிடையேயும் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. அடிகளார் கூறிய இதே கருத்தைக் கம்பநாடனும் வாலிவதைப் படலத்தில், வாலி மூவுலகையும் கடந்த வீட்டுலகை அடைந்தான் என்ற கருத்தை இறந்து வாலி அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்’ (வாலிவதை-159) என்று பாடிச் செல்கிறார். 585. பிறவி என்னும் இக்கடலை நீந்தத் தன் பேர் அருள் தந்தருளினான் அறவை என்று அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு நல் உறவு செய்து எனை உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கம் ஆம் திறமை காட்டிய சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே 7 இப்பாடலின் பிற்பகுதியில் வரும் 'உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய சேவடி என்ற தொடரைப் பின்வருமாறு கொண்டுகட்டுச் செய்தல் நலம். 'பெருக்கமாம் திறமை(யின்) உண்மை காட்டிய சேவடி’ என்பது ஓர் ஆழமான பொருளை உட்கொண்டதாகும்.