பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணப் பதிகம் 0.85 பற்று இல்லாவிடினும், நின் திருவருளுக்குப் பணியாவிடினும், உன் திருவடிகளைக் காணவேண்டுமென்ற பித்துப்பிடித்து அலையாவிடினும், உன் புகழை என்னை மறந்து பிதற்றாவிடினும் உறுதியாக என்பிறப்பை அறுக்கத் துணிந்தவனே, உன்னைப் பிரிந்து இருக்க என்னால் இயலவில்லை என்கிறார். முன்னருள்ள பல பாடல்களில் பிறப்பை அறுத்தான் என்ற இறந்தகால வாய்பாட்டால் கூறியவர் இப்பாடலில் 'அறுப்பாய்’ என்று எதிர்கால வாய்பாட்டில் கூறியது மற்றோர் புதுமையாகும். 03. காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதம் கண்டு கண் களி கூரப் பேணும் அது ஒழிந்தேன் பிதற்றும் அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே தானுவே அழிந்தேன் நின் நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால் & காணும் அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே 5 'ஐயா நீயாக வந்து திருப்பெருந்துறையில் அருள் செய்யவும் நின் அருள் என்பால் நிறையவும் இருந்த நிலைமையிலும் என் புன்மை காரணமாக உன் திருவடிகளைக் காண்பதை விட்டுவிட்டேன். அத்திருவடிகளைக் காண்பதோடுமட்டு மல்லாமல் என்னுள் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டும். அதனையும் செய்யாமல் ஒழிந்தேன். உன் திருவடி மலரில் எனது தற்போதம் ஒரளவு அழுந்தி நிற்க உன் புகழைப் பிதற்றும் செயலையும் செய்யாமல் விட்டுவிட்டேன். துரணாக (தானு) நிற்கும் பெருமானே! முற்றிலுமாக அழியும் நிலைக்கு வந்துவிட்டேன். இப்பொழுது மறுமுறையாக என்பால் கருணைகொண்டு நீ வரினும், தோன்றும் நாணம்