உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாளர் தேசீயம்பிள்ளை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கன்னங்கருத்த மேனியும் கட்டுடலும் கவர்ச்சியு மான தோற்றமும்கொண்ட ஒரு வாலிபன் வந்து வணங்கி நின்றான். எமன் அவனது கைகளைக் குலுக்கித் தழுவிக் கொண்டான். என்ன நந்தா! சுகந்தானே? என்று எமன் குசலம் விசாரித்துவிட்டு, தேசீயம் பிள்ளையை அறி முகப்படுத்திவைத்தார். நந்தன் தேசீயம் பிள்ளையை வரவேற்றுக் கைகுலுக்கக் கையை நீட்டினான். தேசீயம் பிள்ளை கையை இழுத்துக்கொண்டு முகத்திலே வெறுப்பை நிறைத்துக்கொண்டு நின்றார். நெருப்பிலே 'குளித்து வந்தவனய்யா நான் ! சாதாரண தண்ணீரிலே குளித்தால் சாதியெனும் அழுக்கு போகாதென்று தீயிலே கருகி வந்த வாலிப னய்யா! சும்மா தொடும் தொடும் என்னை! என்று கூச்ச லிட்டவாறு நந்தன், தேசீயம் பிள்ளையைத் தழுவிக் கொண்டான். தேசீயம் பிள்ளைக்கு அதிர்ச்சியினால் மயக்கம் வந்துவிட்டது. பிறகு நந்தன் தண்ணீர் கொண்டுவந்து கொடுத் தாள். "ஆபத்திற்குப் பாபமில்லை!" என்று கூறிய வாறு தேசீயம் பிள்ளை அதைக் குடித்து மயக்கம் தெளிந்தார்.