உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாளர் தேசீயம்பிள்ளை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தேசீயம் பிள்ளை, காந்தியின் கால்களைப் பிடித்துக் கொண்டு அய்யோ! அபயம்! அபயம்! என்னைக் காப் பாற்றுங்கள்! என்று கண்ணீர் வடித்தார். எழுந்திரு! எழுந்திரு! என் கால்களைத் தொடாதே! உன் கையிலுள்ள ரத்தக்கறை என் கால்களில் ஒட்டிக் கொள்ளப் போகிறது! என்றவாறு கைகளை உதறி விட்டு காந்தி எழுந்தார். ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகி, அவருக்கே உடம்பு எரிச்சலை உண்டாக்கிவிட்டு தீ விபத்துக் குக் காரணமாகிவிட்ட பரம பாதகனாகிய உனக்கு நரகத்திலும் இடமில்லை! எங்கும் இடமில்லை! உன்னை எப்படி மன்னிக்கமுடியும்! எமதர்ம ராஜனே!' தயவு செய்து இவனை அழைத்துப் போங்கள்! கொள்ளிவாய்ப் பிசாசு போன்ற இவன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்க வில்லை. என் இஷ்ட தெய்வமான ரங்க நாதரையே தீயில் வேகவைத்த அநியாய ஆட்சிக்காரனைப் பார்ப்பது மகாப்பாபம்! உடனே இழுத்துச் செல்லுங்கள்! -காந்தி எமனிடம் இந்த வேண்டுகோளை வெளி யிட்டவாறு நந்தனை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே போய்விட்டார். தேசீயம் பிள்ளை எமனையே பார்த்துக் கொண்டு நின்றார். எமன் "ம் நட! நட'!" என்றான். எருமைமாடு, தேசீயம் பிள்ளையின் முதுகில் ஒரு முட்டு முட்டித் தள்ளியது