உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாளர் தேசீயம்பிள்ளை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உருளுகிறார். திறந்திருந்த வாயில் உதட்டுக்கு முன் நீட்டிக் கொண்டிருந்த இரண்டொரு பற்கள் கீழே விழுகின்றன. பணப்படியொன்றில் கையை ஊன்றி ஆகா! தப்பினேன். கோபிப்படி-என்று பெருமூச்சு விடு கிறார். அடுத்தது பாசிப்படி! பெரிய வழுக்கல்! வீழ்ந் தார்-வீழ்ந்தார்-விருதுநகர் படியில்! தலையிலிருந்து ரத்தம் குபுகுபுவெனக் கிளம்பிற்று ..கால் முறிந்தது! உடம்பெல்லாம் ஊமைக் காயங் கள்? .. திருச்சிப் படியில் உருண்டவாறு-வந்த இடத் தைத் திரும்பிப் பார்த்தார். நெஞ்சில் முட்டியது தஞ் சைப் படி! பிரக்ஞை தவறிவிட்டது. கைகால்கள் செய லிழந்துவிட்டன. தோன்றியது. இருதயம் நின்றுவிடும் போல் மிகக் கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்க முயற்சி செய்தார். விழித்துப் பார்த்தார். பலகணி வழியாக 'உதய சூரியன்' ஒளிக் கரங்களை நீட்டினான். “கண்ட தெல்லாம் கனவு" என முணுமுணுத்துக் கொண்டார். "கனவு பலித்துவிடுமோ?" என்று சந்தேகம் வேறு, சுற்றும் முற்றும் பார்த்தார். அவரது மனைவி காலைக் காப்பியுடன் எதிரே வந்து நின்றாள்.