பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

бо.О திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை

கண்டராதித்தர் “திருஇசைப்பா" பதிகம் ஒன்றே பாடியுள்ளார். (பதிக எண் 20. கோயில்) அப் பதிகத்தில் 8-ஆம் பாடலில்,

"தம் முன்னேருடைய சிறப்பைக் கூறி இறுதிப் பாடலில்-தன்னைச் சோழ வேந்தன் தஞ்சையர் கோன்” எனக் கூறி உள்ளார். அம்பலத்து அமுதை கான் என்றுகொல் எய்துவது சீ; பெருமானுடைய கூத்தை நான் என்றுகொல் காண்பதுவே: எனப் பாடித் தமது ஆராமையைத் தெரிவித்துள்ளார். இறுதிப் பாடலில் தாம் பாடிய இப் பதிகத்தைப் பாட வல்லவர் பேரின்பம் எய்துவர் எனக் கூறியுள்ளார். குறிப்பு :-இப்பதிகம் சுந்தரர் தேவாரம் 83, 84 எண்ணுள்ள பாடல்களைத் தழுவியது போலும். 6. வேணுட்டடிகள் பதிக எண்-21 (கோயில்) -: מחTעJT5ב5. வேணுடு என்பது சேர நாட்டிற்கும் தென்பாண்டி காட்டிற்கும் நடுவானது. அடிகளின் இயற்பெயர் தெரிய வில்லை. இவர் பிறந்த காடுபற்றி இவருக்கு 'வேணுட் உடிகள்" என்ற பெயர் வழங்கலாயிற்று. இவரது பதிகத்தில் மிக கிரம்பப் பழமொழிகள் ஆளப் பட்டுள்ளன. பிற விவரங்களைத் "திருப்பனந்தாள்" பதிப்பிற் காணலாகும். கசப்பாயிருந்தாலும் இளம் வாழைக்காய் இளம் வேப்பிலே இவற்றை மக்கள் விரும்பிக் கறி செய்வதற்கு உபயோகப்படுத்துவார்கள். அதுபோல இழிவான செயல் பெரியோர் பொறுப்பர் ஆயினும் கூத்தப்பெருமானே ஆதரவற்ற எனது தொண்டை விரும்புவது இல்லை.