பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிநெறி அவர் திருவருளால் முடிவுபெற வேண்டும்' என்று திருக்கோவையார் ஒளிநெறி முகவுரையில் எழுதியபடி தணிகைமணி ஐயா அவர்கள் விருப்பத்தை கிறைவேற்றி யருளினுன் என்பதற்கறிகுறியே இந்நூல். இங் நால் அச்சிடப் பெறுகையில் வழக்கம்போல் மெய்ப்பினைத் திருத்து கற்குத் தாம் உயிரோடிருப்பதில் நம்பிக்கையிழந்த கிலேயில் சொல்லி எழுதச் செய்த கையெழுத்துப் படியைத் தமது கண்ணுெளி மங்கிய கிலேயிலும் ஒருமுறைக்கிருமுண்ற ஊன்றிப் பார்த்துத் திருத்திக் கழக ஆட்சியாளரிடம் 1971 சூன் திங்களில் ஒப்புவித்து இதனை விரைந்து அச்சிட்டு வெளிப்படுத்தும் பொறுப்பு துங்களுடையதே என்று சொன்னர்கள். அதற்கு ஆட்சியாளர் ஐயா இன்னும் பத்தாங் திருமுறை இருக்கிறதே. அதற்கு ஒளிநெறி எழுதி முடிக்குங்காறும் தணிகைப் பெருமான் தங்கள் வாழ்நாளே நீட்டித் தருள் வான்' என்று சொல்லியதைக் கேட்டுப் புன்முறுவல் காட்டினர். ஒன்பதாம் விருமுறை முடிய அவர்கள் செய்த அருட்பணி போதும் என்று 5-8-1971இல் சிவபெருமான் தணிகைமணி ஐயா அவர் களின் ஆருயிரைத் தன் திருவடி முேவில் அமர்த்தியருளினன். ஐயா அவர்கள் ஒன்பதா திருமுறைக்கு எழுதிய ஒளிநெறிக் கட்டுரை அச்சிடப்பெறு கின்ற பி . o இத்தகு அருட்பெருஞ் செய்தற்கரிய சிவத்தொண்டினைச் செய்த அருளாளர்க்கு நாம் செய்யுங் கைம்மாறு வெளியிடப்பெற்றுள்ள ஒளிநெறி, ஒளிநெறிக் கட்டுரை நூல்களை வாங்கிப் போற்றுவதே யாகும். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.