பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை பாராள்வே னுட்டடிகள் திருவாலி யமுதச் பரவுபுரு டோத்தமர்பண் புளசேதி ராயர் ஏராரும் இளம்பெருமான் அடிகள் சேந்தர் எண்ணில் அதி ராவடிக விவர்க ளோடும் பாராளுங் கல்லாடர் பட்டினத்துப் பின்: பரவுதிரு விசைப்பாவைப் பாடி னுரே' எனச் சைவ சமயநெறி பக்கம் 7 இல் கண்டிருப்பதால் பட்டினத்தாரும் திருவிசைப்பாப் பாடினதாகத் தெரிகின்றது. பின்வரும் இரண்டு பாடல்கள் அவர் பாடினதாகத் திருவெண் காட்டுப் புராணத்தில் இருக்கக் கண்டேன். 1. உண்டதே உண்டும் உடுத்ததே உடுத்தும் அடுத்தடுத் துரைத்ததே உரைத்தும் கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும் கழிந்தன கடவநா ளெல்லாம் விண்ட தாமரைமேல் அன்னம் வீற்றிருக்கும் விழவரு வீதி வெண்காடா அண்டரே காண அம்பலத்தாடும் ஐயனே ! உய்யுமா றருளே. 2. கோடியல் மனத்தால் வாக்கினுற் செயலால் கொடியஐம் புலன்களால் அடியேன் தேடிய பாவம் நரகமும் கொள்ள செய்தவம் புரியினும் தீரா, வீடிய பிரமர் சிரமெலாம் கவர்ந்த விழவரு விதிவெண் காடா ஆடிய பாதா! அம்பலத்து ஆடும் ஜயனே ! உய்யுமா றருகே