பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 176

வெண்மணல் பரப்புமண் டிலநடுப் பருதியின்

விளைத்தமுத் தழல்சான்ற தாய் வெள்அணி அணிந்துநல் கற்பு:அணி அணிந்துபொரி

மேதக முகந்தட்ட பின்

ஒண்மலர்க் கைப்பிடித்து அதனைவலம் வந்துஅம்மி

ஒருதாளின் ஊன்றிவட மீன்

உபயகண் களின்நோக்கி மணவறையின் வாழ்ந்துமற்

றொருநாளின் மணிவீதி வாய்க்

கண்ணினை களிப்பஆ னைப்பவனி போதுவாய்!

காமநோன் பதுதவிர்கவே!

காரிதரு மாறர்திரு மகளாய கோதையே!

காமநோன் பதுதவிர்க வே! (117)

குளிர்கருணைக் கடவுள் என்று நீ குறித்து வணங்கிய திரு அரங்கன் இனியும் தனியே இருக்க வல்லவன் அல்லன்.

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தலின்கீழ், இந்திரன், அயன் முதலிய உறவினருடன் உனக்குத் திருமணம் பேச வருவான்.

வெண்மணல் பரப்பிய வட்டமான தரையின் நடுப்பகுதியில், வட்டமாக வளர்த்த மூவகைத்தி சான்றாக, உனக்கு வெள்ளணி அணிந்து, நல்ல கற்பாகிய அணியும் அணிந்து, அவன் கைமேல் உன்கையை வைத்து மேன்மையுண்டாக உன் அண்ணன் முறையினர் சிலர் பொரியை அள்ளி அக் கைகளில் வைத்து நெருப்பிலே சொரியச் செய்வர். பின்னர் ஒள்ளிய உன் மலர் போன்ற கையை அவன் பற்றிக் கொண்டு நெருப்பை வலமாக வந்து, அம்மியை ஒரு காலில் மிதித்து வடமீன் ஆகிய அருந்த தியை இரு கண்களாலும் கண்டு மணவறையில் வீற்றிருந்து திருமண வினை முடித்துக் கொள்வாய்.

வேறு ஒரு நாளில் அழகிய வீதியில் கண்டார் கண்களி கூரும்படி, ஆனை மேல் பவனி வருவாய்! ஆதலால் ஆண்டாளே காம நோன்பு நோற்பது வீண் செயல். அதனை விட்டுவிடு காரி மகனார் ஆகிய மாறர் திரு மகளாகிய கோதையே காம நோன்பு விட்டு விடு!

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஆண்டாள் திருமணத்துடன் நிறைவுறுவது மனநிறைவு தருகின்றது.