பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 率

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத் தமிழ்

காப்பு கோயில் அண்ணன் எதிராசர்

பூமாதும் புவிமாதும் பொதுவர் மாதும்

பூதலத்தில் ஒருவடிவாய்ப் பொலிந்தார் என்று நாமாது புகழ் பரப்ப வில்லி புத்துர்

நயந்தவள் பிள்ளைக்கவிதை நாளும் காக்க: பாமாறன் அருட்கு இலக்காய்ப் பூதூர் வந்து பரசமயக் குறும்பரைவெல் பரம ஞானக் கோமான் என்று உலகு புகழ் மும்மைச் செங்கோல்

கோயில் அண்ணன் எனத் தழைத்த கொற்ற வேந்தே! (1)

திருவாய்மொழிப் பாடல் அருளிய சடகோப முனிவரின் அருட்கு இலக்காகி, திருப்பெரும் புதுாரில் தோன்றியவர் உடையவர்: வைணவ சமயம தவிர, வைதிக சமயம் அல்லாத பிற சமயக் குறும்பர்களை வாதில் வென்றனர்; "உயந்த ஞானக் கோமான்' என்று உலகு புகழ்ந்தவர்; முக்கோல் ஏந்திய பகவர்; 'கோயில் அண்ணன்' எனப் புகழ் தழைத்த வெற்றிச் செல்வர் ஆகிய இராமாநுச யதிராசர்.

பூவில் வந்த பெரிய பிராட்டியும், நிலப்பிராட்டியும், ஆயர் குலத்து நப்பின்னைப் பிராட்டியும் ஆகிய முப் பிராட்டிகளும் ஒருங்கிணைந்து ஒரே வடிவமாய் விளங்கினர் என்று நாமகள் புகழ் பரவும்படி, திருவில்லிபுத்துசரில் பிறக்க விரும்பிய ஆண்டாளுக்குப் பாடிச் சூட்டும் பிள்ளைத் தமிழ்க் கவிதை நீடு வாழ எப்போதும் காத்தருளுக!

கொற்ற வேந்து காக்க என்று கூட்டுக. இது விற்பூட்டுப் பொருள்கோள்.