பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

செந்தமிழ்க்குச் சீர்மை செய்த செல்வி, சீவில்லிபுத்துர் பிறந்த அந்தமிழ் ஆண்டாள், பெரியாழ்வாரின் பெண்ணாகவும் இராமனு சரின் தங்கையாகவும் வையம் போற்றும் வனிதையாக விளங்கும் சூடிக் கொடுத்த சுடர்க் கொடி, பாடிக் கொடுத்த பாவை.

உலகில் எந்த பெண்பாற் புலவரும் பாடாத உன்னதப் பாடல்களைப் பாடிய ஆண்டாள் பற்றிய நூல்கள் பல அவற்றுள் ஆண்டாள் பிள்ளைத் தமிழ் ஒர் அரிய நூல். இந் நூற்கு உரைகண்டார் எவரும் இல்லை.

தமிழில் ஆழங்கால் பட்டவரும், ஆழ் வார்கள் ஆய்வு மையத்தின் செயலாளருமான என் மதிப்புக்குரிய அண்ணன் த கோவேந்தன், டி.லிட் , என் வேண்டுகோட்கு இணங்கி - இந் நூற்குத் தெளிவுரையும் ஒர் அரிய ஆராய்ச்சி முன்னுரையும் தந்தார்கள்.

அருந்தமிழ் ஆண்டாளின் வாழ்விலும், பாடலிலும் ஆழ்தாழ்ந்து ஒன்றிய அருமை பெருமையையெல்லாம் புலவர் உரையிலே காணலாம்

தமிழுலகம் பயன்கொள்க.

அன்பன்,

எஸ். ஜெகத்ரட்சகன