பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

திருவிளையாடற்புராணம்


காடு திருத்தி நாடு ஆக்கியமையால் அவன் காடு வெட்டிச் சோழன் என அழைக்கப்பட்டான். அவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தான். அவன் மதுரை சென்று சொக்கனை வழிபட வேண்டு மென்று சதா ஏக்கம் கொண்டிருந்தான்; தூக்கத்திலும் அந்நினைவோடு இருந்தான், சித்தர் வடிவில் சிவனார் வந்து அவன் மெத்த மகிழ்ச்சி அடையும்படி அவனைப் பாண்டிய நாட்டுக்கு வரச் சொன்னார். அன்று இரவே அவன் மதுரை நோக்கி வந்தபோது வைகையில் வெள்ளம் வந்து அவன் வருகையைத் தடுத்தது. அவன் அங்கயற் கண்ணி மணாளனை நினைத்து முறையிட அவர் அவனுக்காக நீரைக் குறைத்துக் கரை ஏற்றினார். அவனை வடக்கு வழியாக வரச்சொல்லிச் சித்தர் வடிவிலே சென்று அவனைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். தாமரைக் குளத்தில் அவன் முழுகி எழுந்து பார்வதி மணாளனை வணங்கி வழிபட்டு மனநிறைவோடு திரும்பிச் க்சன்றான்; வடக்கு வழியிலேயே அவனைப் போகவிட்டுக் கோபுர வாயிலின் பெருங் கதவுகளுக்குத் தாளிட்டு இடப இலச்சனையை முத்திரையாக இட்டுத் தம் திருக்கோயில் விமானத்தை அடைந்தார்.

பொழுது விடிந்தது. தொழு பணி செய்யும் காவலாளிகள் இடபக் குறி இட்டு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்; கயற் குறி இருந்த இடத்தில் வேறு ஓர் அயற்குறி இருத்தல் கண்டு அரசனிடம் சென்று முறையிட்டனர். அக்காலத்தில் மதுரையை ஆண்டவன் இராசேந்திரன் ஆவான்.

இடபத்துக்கு உரியவன் இருடிகளின் தலைவனாகிய கயிலை மன்னன் என்பது அறிந்து எல்லாம் அவர் அழகிய