பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

திருவிளையாடற்புராணம்

உமது அமைச்சர் உமது பொருளைக் கொண்டு எமக்கும் எம்மவர்க்கும் கொடுத்துச் செலவிட்டார்; அதற்கு ஈடாக விலை மதித்தற்கு அரிய குதிரைகளை உம்மிடம் சேர்க்கிறோம், அதற்கு அடையாளமாக நீர் கயிறு மாற்றிக் கொள்க" என்று கூறி அவனிடம் அடையாளத்துக்கு ஒரு குதிரையின் சேனக் கயிற்றை மாற்றிக் கொடுத்து ஒப்படைத்தார்.

"இன்று குதிரைகளை உம்மிடம் ஒப்படைத்து விட்டோம், இனி அவற்றைக் காப்பதும் காவாததும் உம்முடைய பொறுப்பு. மாணிக்க வாசகரிடம் நீர் ஒப்புவித்த கடமை முடிந்து விட்டது" என்று கூறி இறைவன் விடை பெற்றார்.

சேவகனாக வந்த இறைவனின் தனித்தோற்றம் பாண்டியனைக் கவர்ந்து விட்டது தன்னையும் அறியாமல் எழுந்து நின்று வரவேற்றுப் பேசினான். அதே போல விடை கொடுத்து அனுப்பிய போதும் கரங்குவித்து விடை தந்தான்.

மாணிக்கவாசகர் விடுதலை செய்யப் பெற்றார். குதிரை வீரர்களுக்குப் பொன் பட்டாடை தந்து அவர்களைச் சிறப்பித்தான், இறைவனுக்கும் உயரிய பட்டாடை அணிவித்துச் சிறப்புச் செய்தான். குதிரைகள் கொட்டிலில் கட்டி வைக்கப்பட்டன. வேதமாகிய குதிரையில் ஏறிவந்த இறைவன் அந்த ஒரு குதிரையை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு மற்றையவற்றை அரசனிடம் ஒப்புவித்தார். அரசனுடைய பணியாட்கள் குதிரைகளை வரிசையாகக் கட்டி வைத்து அன்று இரவு பராமரித்தார்கள்.