உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் பழி தீர்த்த படலம்

19


தேவர்கள் பதவி அடைந்தவர்களாக இருக்கலாம். என்றாலும் புண்ணியம் ஈட்டுதற்கு மண்ணுலகமே தக்கதாகும் என்று கூறினார். வேட்டை ஆடுவது போலப் பூமியில் சென்று பல இடங்களும் குதிரை ஏறிச் சுற்றிவர் பாரத பூமியில் புண்ணியத் தலங்கள் பல உண்டு; அவற்றுள் தக்க ஒன்றில் நீ காலடி எடுத்து வைத்தால் நீ செய்த பாவம் உன்னை விட்டு நீங்கும்; புடத்தில் இட்ட பொன் என ஒளி பெறுவாய்" என்று கூறினான்

இந்திரனைத் தன் குருவும் தேவர்களும் சூழ்ந்து வரக் கைலாய மலை தொடங்கித் தெற்கு நோக்கிப் பல தலங்களையும் கண்டு வழிபட்டுச் சென்றான். கடம்பவனம் வந்து அடைத்ததும் தென்றல் காற்றுபட்டதும் சுகம் ஒன்று கண்டான்; பாவச் சுமை தன்னைவிட்டு நீங்கியமையை ஆசிரியனுக்கு அறிவித்தான். "இந்த மகிமைக்குக் காரணம் அத்தலத்தில் ஏதாவது அற்புதம் இருக்க வேண்டும்" என்று அறித்தார். இதற்குத்தல விசேஷமே காரணமாக இருக்க வேண்டும் என்றார். மூர்த்தியும் தீர்த்தமும் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். சிவலிங்கமும், தீர்த்தக் குளமும் இருக்குமிடம் அறிந்து செயல்படுங்கள்" என்று கூறினார்.

ஏவலரும் காவலரும் எடுபிடி ஆட்களும் நான்கு திசையும் சென்று துருவித் தேடினர். என்னே அவர்கள் கண்ட காட்சி சிவலிங்கமும் பொற்றாமரைக் குளமும் இருக்கக் கண்டனர்.

கோயில் வழிபாட்டுக்குரிய சிவலிங்கங்கள் மானுடர் படைப்பன அல்ல; அவை தாமே தோன்றுவன என்ற கருத்து உள்ளது யார் பிரதிட்டை செய்தது என்று கூற