பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாகம் எய்த படலம்

91

எழுப்பி அசுரன் ஒருவனைப்படைத்து வெளிப்படுத்தினர். அழிவுக்காகப் படைக்கப்பட்ட அசுரன் தனக்கு இடப்பட்ட பணி யாது என்று உருமிக் கொண்டே வந்தான்; மன்னனையும் அவன் ஆளும் தென்னாட்டையும் அழித்து விட்டு வரச் சொல்லி ஏவினர்.

அசுரன் ஆதிசேடன் வடிவம் கொண்டு கொடிய நாகமாக மதுரையை வந்து சூழ்ந்து கொண்டான். நஞ்சு கக்கிக் கொண்டு மக்கள் அஞ்சும்படி வருத்திக் கொல்ல வந்தது; நகர மாந்தர் நாட்டு அரசனாகிய அனந்த பத்மனிடம் ஓடிச் சென்று உரைத்தனர். அவன் அஞ்சுதல் ஒழிந்து நாகம் அணிந்த பினாகபாணியாகிய இறைவனிடம் முறையிட்டு விட்டுத் தெய்வமே துணையாக அக் கொடிய நாகத்தைச் சந்திக்க அனந்த குணபாண்டியன் வில்லும் அம்புமாக விரைந்து சென்றான். நாவும் பல்லும் வெளியே தோன்றும்படி மலைக்குகைபோல் வாயைத் திறந்து கொண்டு ஆலகால விஷத்தைக் கக்குவது போல் எங்கும் நஞ்சைக் கக்கியது. அவன் அஞ்சாமல் அதன் மீது பல அத்திரங்கள் போட்டும் அவை அதன் உடல் மீது பட்டதும் பாறை மீது பட்ட பானை எனத் தவிடு பொடியாயின. அதற்குப் பிறகு சந்திரபாணம் என்னும் பாணத்தை அதன் மீது ஏவ அது அதைக் கண்டதுண்டமாக்கியது. எனினும் அது கக்கிய நஞ்சு காற்றில் கலந்து மக்களை மயக்கமுறச் செய்தது. இனி என்ன செய்வது என்று அறியாது திக்கு முக்காடினான். சோமசுந்தரனைத் தவிர ஏம நெறி காட்ட அவனுக்கு வேறு யார் இருக்கிறார்கள்!

சிவனின் திருக்கோயிலுக்குச் சென்று நஞ்சு கலந்த காற்றினைத் தூய்மைபடுத்தியும், அதனால் நோயுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற மதுரை