பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருவெம்பாவை விளக்கம்

‘எங்களைப் ப ா து கா த் து உன்னுடைய எப் பொருட்கும் முன்னே விளங்கிய திருவடி மலர்களை அருளு வாயாக’ என முதல் வேண்டுகோளினை விடுக்கின்றன.

இறைவன் திருவடிகளை வழுத்துவதே முறை அவனுடைய திருவருளுக்கு உருவாயமைந்தது திருவடி நிலையேயாகும். திருவள்ளுவரும் தம் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு பாடல்களில் இறைவன் திருவடி களையே கூறினார். இறைவன் திருவடிகளைப் பரவுவதே உலக உயிர்களின் கடமையாகின்றது. பிறவியின் பெரும் பயன் இறைவன் அடிசேர்தலே என்பது பெரியோர் கண், துணிபாகும். முதலாக இருக்கும் இறைவனே முடிவாகவும் இருக்கிறான் என்பதனை உணர்த்த போற்றியருளுக நின் அந்த மாம் செந்தளிர்கள்’ என்றார். திருநாவுக்கரச| பெருமானும் ஆதியும் அந்தமும் ஆவன ஐயாறன் அடித தலமே?” (திருவையாறு:17) என்பர். திருவடிக்கு முதன்மை கூறுங்கால் மலரெனவும், ஈறு கூறுங்கால் செ| தளிர்களெனவுங் கூறியது ஒடுங்கி யுளதாம் (சிவஞான போதம்-குத்திரம் 1) என்னும் சைவ வுண்மை புலப்ப ...so கென்க. ‘தளிரினின்றே மலர் தோன்றும் உண்மை கருத தக்கது’ என்பது கதிர்மணி விளக்கம். இவ் ஆதியினுக்கும் அந்தத்திற்கும் இடைப்பட்டனவாக இறைவனது ஐl தொழில்களைக் குறிப்பர். - -

போற்றி எல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொறி பாதம்’ என்பதனால் படைப்புக் குறிக்கப்பட்டது. * போற்றி எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்’ என்றதனால் அளித்தல் குறிக்கப்பட்டது. போற்றி மாஸ்

நான்முகனும் காணாத புண்டரிகம்’ என்றதனால் மறைத்தல் தொழில் குறிக்கப்பட்டது. போற்றி யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்’’ என்ற

தனால் அருளல் குறிக்கப்பட்டது. இவ்வாறு ஐந்தொழில் களையும் சிவபெருமானது திருவடிகளே செய்தன என்பாரி