பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன் o 109

1றினார். இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலரு ன்ெற சேற்றினையுடைய வயல்களால் சூழப்பெற்ற விருப்பெருந்துறை என்னும் தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமானே’ என்று புறநிலையிலும் அப் பெருமானைக் கண்டு சேற்றிதழ் கமலங்கள் மலரும் ாண்வயல் சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே’ வன்றார். இது சிந்தனைக்கும் எட்டாத நிலையில் விளங்கும் இறைவன், நினைவாரது உள்ளத் தாமரை களில் வீற்றிருக்க வருவன் என்பது குறித்தவாறாம். விருப்பெருந்துறை எனும் திருத்தலத்தின் சிறப்பினைத் ருெவாதவூரடிகள் புராணம் இயற்றிய கடவுள் மாமுனிவர்

வெம்பிறவி வேலைதனில் வீழ்வர்கள் எல்லாம் நம்புசிவ நாமமெனும் கற்புணை பிடித்தால் எம்பரன் அருட்கரையில் ஏறுதுறை யாமால் அம்புவி மொழிந்துள:பெருங் துறை அதன்பேர் (58)

என்று உரைப்பர். உயிர்களை அருட்கரைக்கு ஏற்றுகின்ற துறையாதலின் இவ்வூர் திருப்பெருந்துறை என வழங்கப் படலாயிற்று.

‘ஏறு உயர் கொடி உடையாய்’ என அடுத்து அச் வெபெருமானைப் பாராட்டினார். இடபம் பொறித்த உயர்த்திய கொடியை உடையவனே என்பதனால் பருவம் புலப்படும். முதலிற் கூறிய வாழ் முதலே அருவ நிலையை உணர்த்தும். திருப்பெருந்துறை சிவபெருமானே என்பது அருவுருவ நிலையைக் குறிக்கும். எனையுடை பாய்’ என்று அடுத்து மாணிக்கவாசகர் குறிப்பிட்டது இறைவன் உருவம் கொள்வதெல்லாம் உயிர்களைப் பக்குவப்படுத்தித் தன்னடிமைகள் என்று அவைகள் உணருமாறு செய்தலே யாதலால் அவ்வாறு அழைத்தார் எனலாம். அடுத்து ‘எம்பெருமானே’ என்றார், தன்னை அடிமை கொண்ட காரணத்தால் சிவபெருமான் தனக்குத்