பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அருணன் இந்திரன்

அருணன் இந் திரன் திசை

அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம்கின்

மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன்

எழஎழ, கயனக் கடிமலர் மலரமற்

றண்ணல் அங் கண்ணாம் திரள்கிரை அறுபதம்

முரல்வன, இவையோர்; திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே! அருள்நிதி தரவரும்

ஆனந்த மலையே! அலைகடலே!.பள்ளி

எழுந்தரு ளாயே!

மேலைத் திருப்பாட்டில் பொழுது புலர்ந்தது என்று அறிவுறுத்திய மாணிக்கவாசகப் பெருமான், அப்புலர் காலைப் பொழுதில் நிகழ்வனவாகிய அறிகுறிகளை உணர்த்த முற்படுவார் திருப்பெருந்துறை சிவபெருமானே என்றும், அருள்நிதி தர வரும் ஆனந்தமலையே என்றும், அலைகடலே என்றும் ஆண்டவனை விளித்தார். இங்கு இறைவனைக் கடலாகவும் மலையாகவும் விளித்திருப்பது ஒரு காரணம் பற்றியதாகும். மலை வறட்சிக் காலத்