பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருவெம்பாவை விளக்கம்

எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்

தன்மை போலச் சராசர மனைத்தும்

கின்னிடைத் தோன்றி கின்னிடை அடங்கும்

-கோயில் நான்மணிமாலை: 21

என்பர். பிறவி நோயைத் தீர்க்க மலைமேல் மரு| தாகவும், தேவர்கள் சாகாமலிருக்கக் கடலமுதமாகவும் விளங்கிய காரணத்தால் இறைவனை மலையென்றும் கடலென்றும் கூறினார் எனினும் அமையும்.

இவ்வாறு இறைவனை விளித்துவிட்டு, புறத்தே நிகழும் காலை நிகழ்ச்சிகளை அறிவிக்கத் தொடங்குவா அருணன் இந்திரன் திசை அணுகினன்’ என்றார். அருணன் கதிரவனது தேர்ப்பாகன். இந்திரன் திசையாவது கிழக்கு . இந்திரன் கிழக்கிலும், அக் கினி தென் கிழக்கிலும், இயமன் தெற்கிலும், நிருதி தென்மேற்கிலும், வருணன் மேற்கிலும், வாயு வடமேற்கிலும், குபேரன் வடக்கிலும், ஈசானன் வடகிழக்கிலும் வீற்றிருப்ப என்பது வழக்கு . எட்டுத்திக்குப் பாலர்களான இவர்கள் எண் திசையிலும் காவலாக அமைவர். கதிரவன் கிழக்குத் திசையில் தோன்ற அதன் காரணமாக இருள் நீங்க ஒளி பரவுகிறது என உரைப்பாராய், இருள் போய் உதயம் அகன்றதென்றார். ஒளி வானில் பரவுகின்றமை சூரியன் மேலெழுகின்றமையான் என்பது விளங்க, நின்மலர்த திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ’ என்றார். கதிரவன் எழுதலும் தாமரை மலர்கள் மலர்ந்தன என்பார் அண்ணலங் கண்ணாம் நயனக் கடிமலர் மலர’ என்றார். இறைவனுடைய திருக்கண்களுக்கு ஒப்பாகத் தாமரை மலரைக் கூறுவது மரபு. தாமரை மலர்கள் மலர்ந்த அளவில் அம்மலர்களில் இதுகாறும் தங்கித் தேனை உண்டு மயங்கியிருந்த வண்டுகள் இசை பாடின என்பார் திரள் நிரை அறுபதம் முரல்வன” என்றார். வண்டுகள் வைகறைப்போதில் இசைபாடும் இயல்பின எனபது,