பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன் 125

துறைவன் புகழைச் சொன்மாலை தொடுத்துப் பாடு 1வார் ஒரு புறமிருக்க, பிறிதோர் பக்கம் மலர் மாலை புனைந்து அதனை இறைவனுக்குச் சாத்தி மகிழ்ந்து நிற்கும் தொண்டர்களைக் காணலாம். துன்னிய பிணை ாலர்க் கையினர் ஒருபால்” . மற்றொரு புறத்தில் தொழு நகை துன்பம் துடைப்பவன் இறைவன் என்று உட் .ொண்டு நிற்கும் அடியவர்கள் பலர் திரண்டுள்ளனர். தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்” . கூடும் அன்பு மிகமிகத் தொழுத கையராய் நிற்போருடன், சிவனைக் கண்டதனால் அன்பினால் உருகி ஆனந்தக் கண்ணிர் சொரிபவர் அழுகையராய்” உள்ளனர். இவ்வாறு அன்பினால் உருகி, காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி நிற்பவரின் உடலில் அசைவு தோன்றுதலின் அவரைத் துவள்கையர்” என்றார். இவ்வாறு தொழு கையர், அழுகையர், துவள்கையர் ஆன அடியவர்தம் முத்திறச் செயல்களும் திருநாவுக்கரசர் பெருமானிடத்துத் துலங்கினமையைச் சேக் கிழார் பெருமான்.

கையும் தலைமிசை புனையஞ் சலியன

கண்ணும் பொழிமழை ஒழியாதே பெய்யும் தகையன கரணங் களு முடன் உருகும் பரிவினபேறு எய்தும் மெய்யும் தரைமிசை விழும் முன்பு எழுதரும் மின்தாழ் சடையொடு கின்றாடும் ஐயன் திருருடம் எதிர்கும் பிடுமவர்

ஆர்வம் பெருகுதல் அளவின்றால்

- திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்:167

தம் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது.

மேலும் சேக்கிழார் பெருமானே சிவன் திருவடிக்கழல் நினைந்து உருகும் அடியவர்களை,