பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருவெம்பாவை விளக்கம்

அடியார் உள்ளத் தன்பு மீதுாரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்

எனக் குறிப்பிடுகின்றது.

ஆன்மாவின் வேறாய்ச் சிவன்கண்ணே யுளவாகிய முற்றுணர்தன் முதலிய எண் வகைக் குணங்களும் ஆன்மா வின் மாட்டு மேம்பட்டு விளங்கும் விளக்கமே சிவானந்த வின்பம்; ஆன்மா அதுவாய் அழுந்திநின்று அவ்விளக்கத்தை அறிதலே அநுபவம் எனப்படும்’ எனும் சிவஞான பாடியத் தானும் (398) வலியுறுத்தப்படுவது காண்க எனச் சைவ சித்தாந்த சாத்திர வல்லுநர்கள் குறிப்பிடுவர்.

எது எமைப் பணி கொளுமாறு அது கேட்போம்’ எங்களை ஏவல் கொள்ளுதற்கமைந்த பணி யாது? அதனைக் கேட்க முந்துகின்றோம் யாம் - என்றார்.

ஒர் உடலில் இறைவன் குடிகொண்டு விட்ட பிறகு, நிகழ்வன எல்லாம் இறைவனின் அருளிச் செயல் களேயாகும்.

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ என்று மாணிக்கவாசகரே பிறிதோரிடத்தில் நுட்பமுற நவின்றுள்ளார். இவ்வாறு சிவபெருமானிடம் விண்ணப் பித்து, அவரைப் பள்ளியை விட்டு எழுந்தருளி வந்து தம்மை ஆட்கொள்ள வேண்டியது அவர்தம் தலையாய கடனாகும் என்று குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசகர்.

அது பழச் சுவையென

அமுதென அறிதற்(கு) அரிதென எளிதென

அமரரும் அறியார்:

இது அவன் திருவுரு,

இவன் அவன் எனவே